Tuesday, April 23, 2019

உங்கள் ராசி, நட்சத்திரத்திற்கேற்ற உகந்த மரம் எது

இன்றைய நமது வாழ்க்கை ஆன்மிகத்தோடு இணைந்ததாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் நல்ல நேரம், கெட்ட நேரம், ராசி, நட்சத்திர பலன்கள் பெரிதும் துணையாக உள்ளது...

தங்கள் ராசிக்கேற்ப செடிகள் மற்றும் மரங்களை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ ஒருவர் வளர்த்தால் அவர்களுக்கு நேர்மறை ஆற்றல், அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பு ஆகியவை உண்டாகும்...

நட்சத்திர வரிசைப்படி...

அசுபதி -எட்டி,
பரணி- நெல்லி,
கிருத்திகை -அத்தி,
ரோகிணி - நாவல்,
மிருக சீரீடம் - கருங்காலி,
திருவாதிரை -செங்கருங்காலி, புணர்பூசம் -மூங்கில்,
பூசம் - அரசு,
ஆயில்யம் -புன்னை,
மகம் - ஆலமரம்,
பூரம் - பலாசு,
உத்திரம் -அலரி,
அஸ்தம் -வேலமரம்,
சித்திரை- வில்வம்,
சுவாதி - மருதமரம்,
விசாகம் - விளாமரம்,
அனுசம் - மகிழமரம்,
கேட்டை - புராய்மரம்,
மூலம் - மாமரம்,
பூராடம் - வஞ்சிமரம்,
உத்திராடம் - பலாமரம்,
திருவோணம் - எருக்கமரம்,
அவிட்டம் -வன்னிமரம்,
சதயம் - கடம்பு,
பூரட்டாதி - தேமா மரம்,
உத்திரட்டாதி -வேப்பமரம்,
ரேவதி - இலுப்பை மரம் எனவும்,

ஒவ்வொரு ராசிக்குரிய மரங்கள் மேஷம்-செஞ்சந்தனம், ரிஷபம்-ஏழிலைப்பாலை,
மிதுனம்-பலா,
கடகம்- புரசு,
சிம்மம்-பாதரி,
கன்னி-மா,
துலாம்-மகிழம்,
விருச்சிகம்-கருங்காலி,
தனுசு-அரசு,
மகரம்-எட்டி,
கும்பம்-வன்னி,
மீனம்-ஆல்

இதன்படி உங்கள் ராசி,
நட்சத்திரத்திற்கேற்ற உகந்த மரம் எது என தேர்வு செய்து நீங்களும் மரம் வளருங்கள், பலனை அனுபவியுங்கள்...

எல்லா வகை மரக் கன்றுகளும் நர்சரி கார்டன் அல்லது தோட்டக் கலை துறை அலுவலகங்களில் கிடைக்கும்...

வீட்டில் வளர்க்க வாய்ப்பு இல்லாதவர்கள்
பூங்கா, அல்லது கோவில்களில் நட்டு வைத்து, இயன்ற அளவு பாதுகாத்து வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்...