Tuesday, April 30, 2019

ஒரே_வாரத்தில்_எடை_இழக்க 25 எளிய குறிப்புகள்.



நான் 1- வாரத்திற்குள் பிகினி உடை
அணிவதற்கு என் உடம்பை ஒல்லியாக்கி
ஒரே மாதிரி மாற ஆசைப்படுகிறேன் !!!
நாம் அனைவராலும் இதை செய்ய
முடியுமா...? எடை இழக்க என்று வரும்
போது, துரதிஷ்டவசமாக, ஒரு
கட்டுப்பாடான உணவு முறையை
எப்போதும் பின்பற்ற முடிவதில்லை.

கூடுதல் பவுண்டுகளை ஒரு
ஆரோக்கியமான வழியில், ஒரு
வாரத்திற்குள் குறைக்க முடியும்
என்றால் மிகவும் நன்றாக இருக்கும் அல்லவா...? ஆம் இதோ உங்களுக்கான
வழிமுறைகள்!!
ஒரே வாரத்தில் எடை இழக்க கூடிய
உணவு முறை திட்டம்:
இங்கே எடை இழப்பதற்கான வார உணவு
திட்டத்திற்கான 25 எளிய குறிப்புகள்
உள்ளன:

1. கலோரிகளை குறைக்கவும்:
நீங்கள் உங்கள் கலோரியை குறைக்க
தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில்
பாதி அல்லது ¾ அளவே எடுத்துக்
கொள்ளுங்கள். இது நீங்கள்
அவசியமான ஒன்றாகும்.

2. தண்ணீர் நிறைய குடியுங்கள்:
தண்ணீர் எடை இழப்பதற்கு ஒரு முக்கிய
பங்கு வகிக்கிறது. நீங்கள் அதிக தண்ணீர்
குடிப்பதால் இது உங்கள் வயிற்றை
நிரப்பியே வைத்திருக்கிறது.
அடிப்படையில் தினமும் சுமார் 4
முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிப்பது
உடம்பிற்கு மிகவும் நல்லது. ஒரே
வாரத்தில் எடையை குறைக்க உதவும்
குறிப்பில் இதுவும்
அத்தியாவசியமான ஒன்றாகும்.

3. ஒரு போதும் உணவை தவிர்க்க
கூடாது:
சாப்பிடாமல் இருந்து விட்டால் எடை
குறைந்து விடாது! நீங்கள் ஒரு
வேளை உணவை சாப்பிடாமல்
இருக்கும் போது,, உங்கள் பசியின்
அள்வு அதிகரிப்பதோடு, அடுத்த
முறை உணவை உண்ணும் போது
தேவைகதிகமாக, இன்னும்
அதிகமாகவே உண்பீர்கள்.

4. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்:
படுக்கையில் படுத்துக் கொண்டே
தொலைக்காட்சி பார்ப்பதால் உங்கள்
எடை குறைந்து விடாது! எழுந்து
வெளியே வந்து உங்கள் வேலையை
தொடங்குங்கள். மேலும் உங்கள்
கலோரிகளை எரிக்க வேண்டும்
என்றால் கட்டாயம் நீங்கள் உடற்பயிற்சி
செய்ய வேண்டும். நீங்கள் வேகவாம
எடையை குறைக்க வேண்டும் என்றால்
ஒரு நாளைக்கு இரண்டு முறை நீங்கள்
உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள்
இதற்கு உடற்பயிற்சி கூடத்திற்குதான்
செல்ல வேண்டும் என்ற அவசியம்
இல்லை. சில வீடியோக்கள் அல்லது
யோகா மூலமாகவோ அல்லது
உங்களுக்கு பிடித்த
உடற்பயிற்சிகளையோ நீங்கள் முயற்சி
செய்து பார்க்கலாம்!

5. கார்பனேட் நிரம்பிய பானங்களைத்
தவிருங்கள்:
இது உங்களுக்கு மிகவும் அவசியமா
என்ன தேவையில்லைதானே!
கார்பனேட்டட் நிறைந்த பானங்களில்
சோடா அதிகம் உள்ளதால், இதை நீங்கள்
குடிப்பதால் உங்கள் உடலில் நச்சுகள்
அதிகம் சேர்ந்து உங்கள் எடை
அதிகரிக்கும் என்று
நிரூபிக்கப்பட்டுள்ளது.

6. உங்கள் உணவில் பழங்கள் மற்றும்
காய்கறிகளை அதிகம் சேர்க்கவும்:
வறுத்த உணவு மற்றும் தேவையற்ற
சிற்றுண்டிகளுக்கு பதிலாக, புதிய
பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம்
சேர்த்துக் கொள்ளவும். இவற்றில் அதிக
அளவு நார்ச்சத்தும் மற்றும் நீர்ச்சத்தும்
உள்ளது. பழங்களில் நமது உடலிற்கு
தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது
என்பதை யாராலும் மறுக்க
முடியாது.

7. நீங்கள் தினமும் உணவு உட்கொள்ளும்
அளவினை குறைத்துக் கொள்ளவும்:
எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே
இருந்தால் உங்கள் வயிறு வெடித்து
விடும். எனவே நீங்கள் வயிறு முட்ட
சாப்பிடாமல் பாதி அளவிற்கு
சாப்பிடுவது நல்லது.

8. அதிக நார்ச்சத்தும் மற்றும்
குறைவான கார்போஹைட்ரேட்டும்
சேர்க்கவும்:
உங்கள் உணவில் கார்போஹைட்ரேட்டை
விட ஃபைபர் / நார்ச்சத்து ஆதிக்கம்
செலுத்த வேண்டும். ஒரு வாரத்தில்
நார்ச்சத்தானாது எடை இழக்க எப்படி
உதவுகிறது என்ற கேள்விக்கு இது
ஒரு அத்தியாவசிய பதில், இது உங்கள்
உடலில் இருந்து நச்சுகளை
சுத்தமாக்கி மேலும் எளிதாக
செரிமானம் அடைய உதவுகிறது.

9. உங்கள் உணவில் காய்கறி சூப் அதிகம்
சேர்க்கவும்:
ஆராய்ச்சி முடிவின் படி, உங்கள்
உணவில் புதிய காய்கறி சூப் அதிகம்
சேர்த்து கொள்வதால் கலோரியானது
குறைந்து எடையானது எளிதில்
குறைக்கிறது என்று காட்டுகிறது.

10. நுகரப்படும் கலோரி
எண்ணிக்கையை கவனத்தில்
கொள்ளுங்கள்:
எப்போதும் நீங்கள் ஒரு நாள் எவ்வளவு
கலோரி அளவு சாப்பிடுகிறீர்கள்
என்று ஒரு எண்ணிக்கை வைத்துக்
கொள்ளுங்கள். இதற்கு ஒரு நல்ல வழி
நீங்கள் தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள்
என்று ஒரு நாட்குறிப்பில் குறித்து
வைத்துக் கொள்ள வேண்டும்.

11. சரியான அளவு தூக்கம் தூங்க
வேண்டும்:
ஒரு நல்ல இரவு தூக்கத்தை பெற நீங்கள்
உணர வேண்டியதும் அதற்கு செய்ய
வேண்டியதும் என்ன. நீங்கள் ஒவ்வொரு
நாளும் 8 மணி நேரம் நன்கு தூங்க
வேண்டும். சரியான தூக்கத்தினால்
சரியான வளர்சிதை மாற்றம் ஏற்படும்
மற்றும் ஒரு நல்ல வளர்சிதை மாற்ரம்
நீங்கள் எடை இழக்க உதவி செய்கிறது.

12. உங்கள் உணவில் புரதம் நிறைந்த
உணவை அதிகம் சேர்க்கவும்:
புரதம் நிறைந்த உணவுகள் உங்கள்
தசைகளுக்கு மிகவும் நல்லது.
கொழுப்பானது சுலபமாக நமது
உடலில் தசைகளுக்குல் சென்று
விடும் எனவே இதை சரி செய்ய நன்கு
வேலை செய்வதோடு, உங்கள் அன்றாட
உணவில் புரதம் நிறைந்த உணவுகளை
ஒரு நல்ல அளவில் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.

13. 3 முறை அதிகமான உணவு அல்லது
5 முதல் 6 எண்ணிக்கை வரையிலான
சிறிய அளவுஉணவு?
ஒரே மாதிரி தினமும் 3 வேளைகள்
அதிகமாக உண்பதை விட,
நாளொன்றுக்கு சிறிய அளவில் 5
அல்லது 6 முறை பிரித்து உண்பது
நல்லது. நீங்கள் ஒவ்வொரு முறை
சாப்பிடும் உணவில் குறைவான
அளவு கலோரி கொண்டிருக்க
வேண்டும் என்பதை நினைவில்
கொள்ளுங்கள்.

14. நொறுக்குத் தீனியை தவிர்க்கவும்:
நொறுக்குத்தீனி உங்கள் பசியின்
அளவை அதிகரிப்பதோடு, நீங்கள் எடை
இழப்பதற்கான முதல் எதிரியும் கூட.
நிறைய பேர் கண்ட நேரங்களில்
கொறிப்பதையும், நிறைய நொறுக்கு
தீனி தின்பதையும் தவிர்ப்பதில்லை.
நீங்கள் உண்மையிலேயே எடை இழக்க
வேண்டும் என்று விரும்பினால்,
நொறுக்கு தீனி தின்பதை முதலில்
நிறுத்துங்கள்.

15. உடற்பயிற்சி செய்து முடித்த
பிறகே சாப்பிடுங்கள்:
எப்பொழுதும் உங்கள் வேலையை
முடித்த பிறகே சாப்பிட வேண்டும்
என்று நினைவில் கொள்ளுங்கள். நீங்கள்
தினமும் காலை உடற்பயிற்சி செய்பவர்
என்றால் இதை செய்து முடித்த பிறகே
உங்கள் காலை உணவை உண்ணுங்கள்.

16. உங்கள் தட்டின் அளவை
குறையுங்கள்:
பெரிய தட்டு கொண்டு சாப்பிட்டால்
உங்கள் கலோரியின் அளவும்
அதிகமாகும். எனவே முதலில் நீங்கள்
சாப்பிடும் தட்டின் அளவினை
குறைத்து சிறிய தட்டினை
பயன்படுத்துங்கள். எப்போதும் தட்டு
நிறைய போட்டு சாப்பிட கூடாது.

17. எண்ணெய் உணவுகளை தவிர்க்கவும்:
எண்ணெய் உணவுகளில் அதிக அளவில்
கலோரிகள் இருக்கின்றன. எனவே
முடிந்த வரை எண்ணெய் உணவுகளை
பயன்படுத்துவதை தவிருங்கள்.

18. உருளைக்கிழங்கு அதிகம்
சாப்பிடுவதை தவிர்க்கவும்:
எடை இழக்க சில திட்டங்களையும்,
டயட்டில் இருப்பவர்களுக்கும்
உருளைக்கிழங்கு நல்லதில்லை.
டயட்டில் இருக்கும் போது
ஒருபோதும் உருளைக்கிழங்கை
பயன்படுத்த கூடாது.
உருளைக்கிழங்கில் அதிக அளவு
கலோரியும், கார்போஹைட்ரேட்டும்
உள்ளன.

19. வெண்ணெய், நெய் அல்லது சீஸ்
இவற்றை தவிர்க்கவும்
இந்த பொருட்களில் அதிக அளவு
கொழுப்பு நிறைந்து உள்ளன. நீங்கள்
விரைவாக எடை இழக்க வேண்டும்
என்றால், இந்த பொருட்களை கட்டாயம்
உங்கள் உணவில் சேர்க்க கூடாது.
வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் உணவில்
தயிர் சேர்க்கலாம், இதில் புரதம் அதிக
அளவில் உள்ளது.

20. பழச்சாறுகள் குடிப்பதை விட முழு
பழங்களாக தேர்வு செய்து
சாப்பிடுவது நல்லது:
பழச்சாறில் இருக்கும் ஊட்டச்சத்தை விட,
முழு பழங்களில் அதிக அளவு
ஊட்டச்சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.
பழங்களை சாறு எடுத்து
பயன்படுத்துவது வெறும் சர்க்கரை
தண்ணீர் பயன்படுத்துவதற்கு சமம், எனவே
அப்படியே பழமாக சாப்பிடுவது நல்ல
பயன் அளிக்கும்.

21. உங்கள் உணவிற்கு முன் தண்ணீர்
குடிக்கவும்:
நீங்கள் உணவு சாப்பிடும் முன் தண்ணீர் 2
டம்ளர் குடித்து உங்கள் வயிற்றில்
இருக்கும் சில இடைவெளியை
நிரப்பிக் கொள்ள வேண்டும். இப்படி
செய்வதால் நீங்கள் உட்கொள்ளும்
உணவின் அளவு குறையும்.

22. 2 நாட்களுக்கு ஒரு முறை உங்கள்
எடையை கண்காணிக்கவும்:
ஒரு நல்ல எடை இயந்திரத்தை கொண்டு,
2 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து
உங்கள் எடையை பரிசோதித்து
பார்க்கலாம். இப்படி செய்வது மிகவும்
நல்லது, அன்றாடம் உங்களின் எடை
குறைகிறதா அல்லது அதிகமாகிறதா
என்று நங்களே கண்காணிப்பில் வைத்து
இருக்கலாம். இது உங்களின்
நடவடிக்கைகளை தொடர்ந்து
கண்காணித்து உங்கள் பிஎம்ஐ மற்றும் BMR
யை நன்றாக வைத்து இருக்கும்.

23. டயட்டில் இருந்து ஒரு போதும்
விலகி இருக்க வேண்டாம்:
நீங்கள் டயட்டை சரியாக கடைபிடித்தால்
நல்ல முடிவுகள் எப்போதும்
உங்களுக்கே.
சரியான உணவு முறை திட்டம்:

24. எடை குறைப்பில் கலோரிகள் ஒரு
முக்கிய பங்கை வகிக்கின்றன. எந்த
அளவிற்கு விரைவில் உங்கள் உடலில்
7000 கலோரிகள் சேர்கிறதோ,
அப்போது உங்களின் எடை 1 கிலோ
கூடுதலாகி விடும். உங்கள் உடலில்
ஒரு வாரத்தில் 7000 கலோரிகளை
எரிக்கிறீர்கள் என்றால் அதே நேரத்தில்
உங்கள் எடையும் 1 கிலோ குறைந்து
விடும். அதிக கலோரிகளை எரித்து
விரைவாக எடை குறைக்க வேண்டும்
என்ற குறிக்கோளுடன் செயல்படுங்கள் –

25. தக்காளி, பச்சை காலிபிளவர்,
வெள்ளரிக்காய், திராட்சைப்பழம்,
ஆரஞ்சு, செலரி, பாதாமி, கேரட்,
ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், தர்பூசணி,
போன்ற சில பழங்கள் மற்றும் காய்கறிகள்
பயன்படுத்துவதன் மூலம் உங்கள்
கலோரியை விரைவாக எரிக்க
முடியும். இதை நீங்கள் உங்கள் உணவில்
சேர்ப்பது மிகவும் நல்ல முடிவு.

இங்கே இரண்டு வெவ்வேறு கலோரி
அளவு உணவு திட்டம் இருக்கிறது.
நீங்கள் 85 கிலோ கீழே இருந்தால் 1200
கலோரி அளவுள்ள உணவு முறையை
பின்பற்றவும், இல்லையெனில் 1800
கலோரி அளவு உணவு முறையை
பின்பற்றவும்.... பின்பற்றுவீர்களா... நண்பர்களே.