Sunday, July 8, 2018

கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

ஒரு கேரட்டில், நாள் ஒன்றுக்கு தேவைப்படும் சத்துக்கள் எவ்வளவு இருக்கிறது தெரியுமா? ---------------------------------------------- விட்டமின்-A சத்துக்கள் 210% உள்ளது. விட்டமின் கே 10% உள்ளது. விட்டமின் சி 6% உள்ளது. கால்சியம் 2% உள்ளது. ---------------------------------------------- - கேரட்டின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!: - கண் பார்வையை மேம்படுத்தும். - புற்றுநோய் வராமல் தடுக்கும் குணம் கேரட்டுக்கு உள்ளது. - உடல் செல்களை இளமையாக வைத்துக்கொள்ள உதவும். - தோலை பளபளப்பாக வைத்துக்கொள்ள கேரட் உதவும். - நோய் தொற்றுக்களில் இருந்து உடலை காப்பாற்றும் ஆன்டிசெப்டிக்காகவும் கேரட் பயன்படுகிறது. - இதயம் தொடர்பான நோய்களில் இருந்தும் கேரட் காப்பாற்றக்கூடியது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. - உடலில் சேரும் நச்சு பொருட்களை அகற்றும் வல்லமை கேரட்டுக்கு உண்டு. - சொத்தை பல் வரவிடாமல் தடுக்கும் தன்மையும் கேரட்டுக்கு உள்ளது. - வாரத்துக்கு ஆறு கேரட்டாவது சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவு என்கிறது ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆய்வு.

No comments: