Friday, April 10, 2020

பக்கவாதம் தீர மருந்து:-



பக்கவாத நோய் வாதமிகுதியால் வரும் நோய் எனவே வாதத்தை தன்நிலைப்படுத்த வேண்டும்.
பக்கவாத நோயாளிக்குத் தாக்கப்பட்ட உறுப்புகள் பயனற்றுப் போவதால் முதலில் தேங்கியுள்ள மலத்தைக் கழிச்சல் மருந்துகளைக் கொடுத்து மலச்சிக்கலைப் போக்கவேண்டும்.

முள் சங்கின் இலை, அதன் விதை, அதன் பட்டை இம்மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு காலை, மாலை, சாப்பிட்டு, சுடுநீர் அருந்தி வர, பாரிசவாதம் அதனால் கை கால்கள் உணர்வற்றுப்போன நிலை மாறும்.

மேலும் சித்திர மூலப்பட்டை, மாவிலிங்கப் பட்டை, கொன்றைப் பட்டை, முருங்கைப்பட்டை., சங்கன்பட்டை, வேப்பம் பட்டை, வெள்ளறுக்கு, சுக்கு, மிளகு, பஞ்சலவணம் என்று சொல்லப் படுகின்ற இந்துப்பு, வளையலுப்பு, சோற்றுப்பு, கல்லுப்பு, கரியுப்பு முதலியவைகளைச் சமமாக எடுத்து இடித்துச் சூரணமாகச் சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்தச் சூரணத்தில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் முதல் 2 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர, பக்கவாதம் குணமடையும்.

No comments: