Wednesday, April 22, 2020

RIP என்று ஏன் சொல்லக் கூடாது? தமிழர் மரபின் படி!!



RIP என்றால் Rest In Peace என்று கிருத்தவ சமயத்தினர் தங்கள் இரங்கல்ச் செய்தியில் கூறுவர்.

அவர்களது சமயத்தின் படி இறந்தவர்களை புதைப்பது தான் வழக்கம். அப்படி புதைக்கும் போது அவர்களது ஆன்மாவும் புதைக்கப்பட்டு காத்திருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.


யட்ச்மென்ட் டே (jugement day) என்று அவர்கள் அழைக்கும் நாள் மீண்டும் யேசு வரும் நாளாகும் அன்று கல்லறைகளில் காத்திருக்கும் ஆத்மாக்கள் சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்பப்படும் அவரவர் செய்த பாவ, புண்ணிய காரியங்களின்படி என்பதே நம்பிக்கை எனவே ஒருவர் இறந்தவுடன் (Rest In Peace) நிம்மதியாக காத்திருங்கள் என்று கூறுவது வழக்கம்.


சைவத்தமிழ் மரபு கூறுவது என்ன ?


சைவத்தமிழ் மரபில் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டது. ஆன்மா வேறு அழியாதது. உடல் அழிவது ஒருவர் செய்யும் பாவ, புண்ணிய கணக்கின்படி அந்த ஆன்மா மறுபிறவி எடுத்து வரும். புண்ணிய ஆத்மாக்கள் இந்த பிறப்பு இறப்பு சூழற்சியில் இருந்து விடுபட்டு ‘சொர்க்கம்’ அடைந்துவிடும். கடவுளின் திருவடிகளில் சேர்ந்துவிடுகிறது.


எனவே தான் நாம் ஒருவர் இறந்தவுடன் சொர்கத்தை அடையப் பிரார்த்தனை என்றோ, ஓம் சாந்தி என்றோ சொல்ல வேண்டும். சொல்லப்போனால் RIP என்று சொல்வது சாபமாகவே முடியும். இறந்த அந்த ஆத்மா சடலமாகவே அழைக்கப்படுகிறது. சடல வடிவில் ஆன்மா உலா வருவது பேய்க்கு சமானம்!


இதனால்தான் இறந்தவுடன் செய்யும் 13நாள் காரியங்களில் குடும்பத்தினர் நிதமும் இந்த உலகை விட்டு சடல உலகிற்கு செல்ல வேண்டுமாய் பலவழிகளில் கேட்டு காரியங்களை செய்கின்றனர்.


எனவே இனி எவரேனும் சைவசமயத்தவர் இறந்தால் தயவு செய்து ஓம் சாந்தி! ஆத்மா சொர்க்கம் அடையட்டும் ஓம்!! (Om Shanthi! May The Soul Attain Sorkkam! Om) என்றே செய்தி அனுப்புங்கள்.


No comments: