
புழு வெட்டு ஒரு தொற்றுநோயே என்கின்றனர்.இது ஒரு பூஞ்சை வகையைச் சேர்ந்ததாகும். புழுவெட்டு உடையவர்கள் உபயோகித்த சீப்பை மற்றவர்கள் உபயோகிக்க வேண்டாம்.
ஒவ்வாமை, கெட்டுப் போன அசைவ உணவுகள் உண்பது, குடல் கிருமிகள், பல் சொத்தை, மன இறுக்கம் என்ற டென்சன், இரத்தத்தில் போதுமான அளவு தேவையான சத்துகள் இன்மை, மார்பில் கழலை கட்டிகள், கருத்தடை மாத்திரைகளினால் ஏற்படும் பின் விளைவுகள் ,ஸ்டீராய்டு மாத்திரைகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பின் விளைவுகள், சில வகை காய்ச்சல் சிபிலிஸ் கொனேரியா போன்ற பாலியல் நோய்கள் போன்ற ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ சேர்ந்து இருக்கலாம்.இது தலையிலும் தாடி மீசை முளைக்கும் இடங்களும் வரலாம்.முதன் முதலில் சாதாரண வைத்தியம் பார்த்து அதன் பின்னும் சரி வரவில்லையென்றால் குமட்டிக்காய் தைலத்தின் மூலம் சரி செய்யலாம்.
முதலில் நோயாளிக்கு பேதிக்கு கொடுக்க வேண்டும். அதன் பின் புழுவெட்டு உள்ள இடத்தில் கல்லுப்பு கரைசலைக்கொண்டு காலை மாலை தேய்த்து அழுத்தி துடைத்துவிட்டு
சின்ன வெங்காயம் 2,மிளகு சுமார் 10 ,கல்லுப்பு ஒரு ஸ்பூன் இவற்றை நன்கு மை போல அரைத்துவிட்டு பாதிக்கப் பட்ட இடத்தில் தேய்த்துக்கொள்ளவும்.ஒரு வாரத்திற்குள் வளர்ந்துவிடும் என குண பாட நூல் கூறுகிறது.அதற்கும் சரிவரவில்லையென்றால் குமுட்டி தைலம் தயார் செய்து கொடுக்கலாம்.
வரிக் கும்மட்டிக் காய் பெரியது -4.
சுத்தமான வே.எண்ணெய்-50ml.
தே.எண்ணெய்-25ml
ந.எண்ணெய்-125ml.
கும்மட்டிக்காயை வெட்டி மைபோல அரைத்து மேற்கண்ட எண்ணெய்களில் இட்டுக் காய்ச்சி ஆறியதும் பத்திரப்படுத்தவும்.
முன் சொன்னது போலவே ஒருமுறை பேதிக்கு கொடுத்துவிட்டு உப்புக்கரைசலைக் கொண்டு நன்கு அழுத்தி தேய்த்த துடைத்துவிட்டு தைலத்தை பாதிக்கப்பட்ட இடைத்தில் மீண்டும் அழுத்தி தேய்த்து மசாஜ் செய்யவும்.தினம் இரு முறை.
நல்ல பலன் கிடைக்கும்.
மிக எளிமையான செய்முறை.
ஊமத்தை பிஞ்சை அந்த இடத்தில் தேய்த்து விட்டு சிறியாநங்கை இலைகள் தேய்த்து ஊற விட்டு தலைக்கு குளித்து அதன் பின் சிறிய வெங்காயம் சாறு தேய்த்து குளித்து வந்தால் முடி அருமையாக முளைத்து விடுகிறது. என் அனுபவம்
No comments:
Post a Comment