
பொதுவாக குழந்தை இல்லாததை மட்டுமே சிலர் புத்திரதோஷம் எனக் கருதுகின்றனர் .
ஆனால்
குழந்தை இல்லாமல் இருப்பது, குழந்தை ஊனத்துடன் பிறப்பது, குழந்தையால் தலைகுனிவு ஏற்படுவது,
குழந்தைக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் (படிப்பு,நோய்,ஊதாரி தனம்)செலவு செய்து கொண்டே இருப்பது . இங்கு படிப்பு மட்டும் சுபச்செலவு என்ற அமைப்பில் போகும்.குழந்தை கடைசி காலத்தில் தன்னைக் கவனிக்காமல் இருப்பது, குழந்தைக்கு தன் கையால் கொள்ளி வைப்பது என
இவை அனைத்துமே புத்திர தோஷம் எனப்படும்.
ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி சுப நட்சத்திரங்களில் அமர்ந்து கெடாமல், குருவும் வலுவுடன் இருந்து , ஐந்தாம் இடத்தை லக்ன சுபர்கள் நோக்கினால் குழந்தையால் யோகம்.
ஐந்தாம் அதிபதி கெட்டு, குருவும் கெடுதலான அமைப்பில் இருக்கும் பொழுது ,5ல் பாவ கிரகம் இருந்தால் திருமணத்திற்கு ஜாதகங்களை இணைக்கும் பொழுது அதற்கேற்ற வலுவுடன் இருக்கும் ஜாதகங்களை இணைக்க வேண்டும்.
இல்லை என்றால் கண்டிப்பாக குழந்தை சார்ந்த விஷயங்களில் பிரச்சினையை கொடுத்துவிடும்.
ஜாதகத்தில் புத்திர தோஷம் இருப்பவர்கள் திருச்செந்தூர் முருகனை தினசரி வழிபட்டு வர நல்ல மாற்றம் உண்டாகும்.
ஓம் நமசிவாய
No comments:
Post a Comment