Monday, April 6, 2020

மகாலட்சுமி வரும் நேரம் என்றால் என்ன? அதன் பயன் என்ன?


ஸ்ரீராமஜெயம்

கோதூளி லக்னம் ,(முகூர்த்தம்)


ஜோதிடர்களிலேயே சிலருக்கு இது தெரிந்திருக்கலாம் .பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

கோ என்றால் பசு.

நமது இந்து மதத்தில் ,பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிப்பதாக ஐதீகம்.

கோ பூஜை செய்வது, கோ தானம் கொடுப்பது ,கோவிற்கு உணவளிப்பது அளவற்ற நன்மைகளை கொடுக்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன் சன்னதிக்கு எதிரே கொடிமரத்துக்கு அருகில் பெரும்பாலான நேரங்களில் ஒரு பசு கன்றுடன் நிற்கும்.

வடமாநிலத்தில் இருந்து வரும் மக்கள் கோ வின்பெருமையை உணர்ந்து அதற்குத் தக்க பூஜைகளை செய்வர்.

( நம்மாளுக அதை கண்டு கொள்வதே கிடையாது)

கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனும் பசு மேய்ப்பாளனாகவே உள்ளான்.

காமதேனு எனும் பசுவின் உடலில் முப்பது முக்கோடி தேவர்களும் உள்ளதால் பசுக்கள் மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்து, வயிறார உண்டு, துள்ளிக் குதித்து விளையாடி, தூசியுடன் கொட்டிலுக்கு திரும்பும் நேரமே அதாவது அந்தி நேரமே கோதுளி லக்னம் எனப்படும்.

பொதுவாக ஒரு மனிதன் மிக மிக சந்தோஷமாக இருக்கும்பொழுது அவனிடம் நமது தேவைகளை கேட்டால் ,நம் தேவைகள் ஓரளவு நிறைவேறும்.

இந்த நேரத்தில் பசுவை வழிபட பீடைகள் நீங்கி ,செல்வம் தழைத்தோங்கும்

பொதுவாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு எந்த தரித்திரமும் அண்டாது.

சூரிய உதயத்திற்கு முன் வீட்டில் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி ,சூரிய உதய நேரத்தில் ,சூரியனை வழிபடுவது எப்பேர்பட்ட தோஷத்தையும் போக்கும்.

ஆனால் எல்லோராலும் இது முடியாது.

மாலை நேரங்களில் அனைவர், வீட்டிலும் ஓரளவு விளக்கேற்றி வழிபடுகின்றனர்.

பொதுவாக சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

ஒரு நாழிகை என்பது ஜோதிடத்தில் 24 நிமிடம்.

சராசரியாக மாலை 5.45 முதல் 6.15 வரை உள்ள நேரமே மகாலட்சுமி வரும் நேரம் ,பசு கொட்டிலுக்கு வரும் நேரம் அதாவது கோதூளி லக்ன நேரம் (முகூர்த்தம் )எனப்படும்.

இங்கு 6 மணியை நடுவில் வைத்து அதற்கு முன்பான 12 நிமிடம் 5.48 லிருந்து 6.12 வரை உச்ச கோதுளி லக்னம் எடுத்துக் கொள்ளலாம்.

5 .48 மணி நிமிடத்திலிருந்து
6 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி அதாவது சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் மஹாலக்ஷ்மியின் பூரண அருள் கிடைக்கும்.

இந்த நேரத்தில்தான் பசுவும் கொட்டிலுக்கு திரும்பியிருக்கும்.

வீட்டில் பூஜைகளை செய்து முடித்தபின், மஹாலக்ஷ்மியின் பூரண அருளைப் பெற அருகில் பசு இருந்தால் அவற்றையும் வழிபடலாம். அதற்கு உணவு கொடுக்கலாம்.

வீட்டில் இருக்கும் அனைவரும் எளிதில் செய்யக்கூடிய இந்த எளிய வழிபாட்டின் மூலம் உங்களுடைய செல்வநிலை உயரும். தரித்திரம் நீங்கும்.

அன்னபூரணியின் அருள் ஆசியால்,ருசியான பஞ்சமில்லாத உணவு கிடைக்கும்.

மகாலட்சுமி உங்கள் வீட்டை நோக்கி வரும் நேரத்தில் ,அவளை உங்கள்
வீட்டிலேயே அமர வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

அனைவரும் பயன்பெற இந்த பதிவை அதிகமாக ஷேர் செய்யுங்கள்.

ஓம் நமசிவாய

No comments: