Friday, April 10, 2020

ஒரு மாதத்தில் 2 முதல் 5 கிலோ வரை உடல் எடை அதிகரித்து அமுல் பேபி ஆக....!!!


உடல் எடையை அதிகரிக்க தேவையான பொருட்கள்:

கருப்பு உளுந்து – 50 கிராம்
எள்ளு – 50 கிராம்
முந்திரி பருப்பு – 50 கிராம்
பாதாம் – 50 கிராம்
வேர்க்கடலை – 50 கிராம்
பூசணி விதை – 50 கிராம்
ஆளி விதை – 50 கிராம்
அஸ்வகந்தா – 50 கிராம்
பால் – ஒரு கிளாஸ்
தேன் – ஸ்பூன்

செய்முறை:-

முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 50 கிராம் உளுந்து மற்றும் 50 கிராம் எள்ளு ஆகியவற்றை வாசனை வரும் அளவிற்கு வறுத்து ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

அதன் பிறகு அதே கடாயில் 50 கிராம் முந்திரி, 50 கிராம் நிலக்கடலை, 50 கிராம் பாதாம் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.

வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும், மிக்சி ஜாரில் சேர்த்து கொள்ளவும், பின் இதனுடன் 50 கிராம் பூசணி விதை, 50 கிராம் ஆளி விதை, 50 கிராம் அஸ்வகந்தா ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

அரைத்த இந்த பொடியை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளவும்.

பின் ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலில் ஒரு ஸ்பூன் அரைத்த பொடி மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அருந்த வேண்டும்.

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் காலையில் டீ, காபி அருந்துவதற்கு பதில் இந்த பானத்தை அருந்தி வர உடல் அதிகரிப்பதை தாங்களே கூடிய விரைவில் உணருவீர்கள்.

No comments: