Wednesday, April 22, 2020

செவ்வாய் தோசமும்,விஞ்ஞான ரகசியமும்.,


ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்திற்கு அல்லது சந்திரனுக்கு 2,4,7,8,12 ல் செவ்வாய் நின்றால் அது செவ்வாய் தோசம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அப்படி பட்ட ஜாதகத்தை அதே தோசமுள்ள் சேர்க்கவேண்டும் என்பது சாஸ்திர விதி.

செவ்வாய் மனித உடலில் ரத்தத்தை குறிக்க கூடிய கிரகம்.நமது ரத்தத்தில் இயற்கையாக ஆண்டிபடிக் இருக்கும்(நோய் எதிர்ப்பு சக்தி) அதேபோல் ஆண்டிஜென்(நுன்கிருமி) இருக்கும் ஆண்டிபாடிக் அதிகமாக நமக்கு இருக்கும்போது ஆண்டிஜென்னை பற்றி கவலைபடவேண்டியதில்லை.

ஆனால் செவ்வாய் தோசம் இருப்பவர்களுக்கு ஆண்டிபயாடிக் எவ்வளவு ரத்தத்தில் இருக்கிறதோ அதே அளவு ஆண்டிஜென்னும் இருக்கும் இந்த அமைப்பு உள்ளவர்களை செவ்வாய் தோசம் இல்லாதவர்கள் அதாவது ரத்தத்தில் ஆண்டிஜென் இல்லாதவர்களை இணைக்கும் போது அவர்களின் உடல் நிலை பாதிக்கப்படும்(ஆயுள் அல்ல).

அதனால் ஆண்டி ஜென்னும்,ஆண்டிபாடிக் சம அளவுள்ளவர்களை அதே சம அளாவு உள்ளவர்களுடன் இணைத்தால் நோய் நொடியற்ற இல்லற வாழ்வு சிறப்பாக அமையும் அதாவது மைனஸ் *மைனஸ் = பிளஸ்.

ஆண்டிஜென்(நுண்கிருமி) இல்லாத ஒரே திரவம் தாய்ப்பால் மட்டும்தான் அதனால்தான் தாய்ப்பாலை தெய்வப்பால் என்பார்கள்,

நம் உடலில் உள்ள நுன்கிருமிகளை குறைக்கும் தன்மை முருகன் கோயிலில் உள்ள காந்த அலைகளுக்கு உண்டு அதனால்தான் செவ்வாய் தோசம் உள்ளவர்களை துவரம் பருப்புடன் முருகனை வணங்க சொன்னார்கள்.

No comments: