Friday, April 10, 2020

குழந்தை சரியாக சாப்பிடவில்லையா? வளர்ச்சி குறைவாக இருக்கிறதா? முகத்தில் தெளிவே இல்லையா? மந்தமாக, சோர்வாக இருக்கிறதா?


‘வயித்துல பூச்சி இருக்கும். பூச்சி மருந்து கொடுத்துப் பாருங்க. சரியாயிடும்...’ என்கிற அறிவுரையைப் பரவலாகக் கேட்கலாம்.

குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் வருவது ஏன்? அதன் அறிகுறிகள் என்னென்ன? பூச்சிகளால் ஆபத்து வருமா? எப்படிக் கண்டறிவது? என்ன சிகிச்சை? ‘உங்கள் குழந்தை அசுத்த மான மண்தரையில் வெறுங்காலுடன் நடப்பதாலும், அசுத்தமான நீரில் விளையாடு வதாலும், சுகாதாரமற்ற உணவு வகைகளை உண்ப தாலும் நோய்த்தொற்று ஏற்படுகிறது.

மண் தரையிலும் தண்ணீரிலும் கைகளை இட்டு விளையாடி விட்டு, அதே கைகளை வாய்க்குள் வைக்கலாம். இதனால் கை விரல்களில் படிந் திருக்கும் புழுக்களின் முட்டைகள் உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குள் செல்கின்றன. அங்கு அந்த முட்டைகள் பொரிந்து புழுக் களாக உருவாகின்றன. குழந்தைகளின் உடலுக்குள் அந்தப் புழுக்கள் பெருமளவில்
முட்டைகளை உருவாக்குகின்றன.

இப்புழுக்களினால் தொற்றுநோய் தாக்குதல் ஏற்பட்டு, குழந்தை சோர்வாக காணப்படும். குழந்தைகளிடையே இதுபோன்ற எளிதாக பரவக்கூடிய நோய் தாக்குதல் பொதுவானதே. இந்தத் தாக்குதலை மிக எளிதாகவும் விரைவாகவும் குணப்படுத்தி விடலாம்.சுற்றுப்புறத்தில் அசுத்தமான மண்தரை மற்றும் குளம், குட்டை, கிணறு, குடிநீர் குழாய் போன்ற நீர்நிலைகளில் ஏராளமான கொக்கிப் புழு, நாடாப் புழு போன்ற கண்ணுக்குத் தெரியாத பல்வேறு புழுக்களின் முட்டைகள் நிறைந்துள்ளன.

இவற்றில் நம் குழந்தைகள் விளையாடும்போது, சுத்தம் செய்யப்படாத கை, கால்கள் மூலம் குழந்தைகளின் வாய் வழியாக வயிற்றுப் பகுதிக்குள் முட்டைகள் ஊடுருவி, நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன. இத்தகைய நோய்தொற்றுக்கு உள்ளான குழந்தைகளுக்கு நேரடியான அறிகுறிகள் காணப்படாவிட்டாலும், அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும். குழந்தைகளின் எடை குறைவதுடன், எப்போதும் மந்தமாக காணப்படும். குழந்தையின் மலம் வரும் வழியில் அரிப்பு மற்றும் வலி ஏற்படும். இதனால் குழந்தைகள் தூங்குவதற்கும் சிரமப்படுவார்கள்.

சில குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக வறட்டு இருமலும் தோல் அரிப்பும் ஏற்படும். ஒருசில குழந்தைகளுக்கு அரிய வகை நோய் அறிகுறிகளும் காணப்படலாம். அரை சென்டிமீட்டர் நீளமுள்ள கனமான நூலைப் போல காணப்படும் நாடாப் புழுக்களின் நோய்த் தொற்று குழந்தைகளிடையே அதிகம் காணப்படும்.

இத்தகைய பாதிப்பு அடைந்த குழந்தை இரவு படுக்கும் முன், அக்குழந்தையின் பின்புறத்தை லேசாக விரித்து, விளக்கை வைத்து பார்த்தால், அங்கு நாடாப் புழுக்கள் நெளிந்து கொண்டிருப்பது தெரியும். சில குழந்தைகளின் உடையிலும் படுக்கை விரிப்பிலும் கூட நாடாப் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கும். சில குழந்தைகளின் மலத்திலும் நாடாப் புழுக்கள் காணப்படும். இதுபோன்ற அறிகுறிகள் உங்கள் குழந்தைகளிடம் காணப்பட்டால், குழந்தைகள் நல மருத்துவரை உடனடியாக சந்திப்பது நல்லது.

சுத்திகரிக்கப்படாத நீரில் சுத்தம் செய்யப்படாமல் அரைகுறையாக சமைக்கப்பட்ட காய்கறி, கீரைகள், அரைவேக்காட்டில் எடுக்கப் பட்ட மீன் மற்றும் மாமிச உணவுகள் மூலமாக வும் வயிற்றுக்குள் செல்லும் புழுக்களால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது.சுகாதாரமற்ற நிலையில் உள்ள ஒருவர் குழந்தையை எடுத்து கொஞ்சும்போதும் நோய் தொற்றுகிறது. குழந்தைகளின் வெட்டப்படாத நகங்களின் உட்புறத்தில் தேங்கியுள்ள அழுக்குகள், அழுக்கடைந்த பொம்மைகளை குழந்தைகள் வாயில் வைக்கும்போது அதிலுள்ள அழுக்குகள் மூலம் நேரடியாக புழுக்கள் உடலுக்குள் செல்கின்றன.

குழந்தைகளின் உடலுக்குள் இவ்வகை புழுக்கள் சென்று, உடலில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்துகளை உறிஞ்சிவிடுகின்றன. இதனால் குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு, எடை குறைவு மற்றும் ரத்தசோகை ஆகிய பிரச்னைகளும் ஏற்படுகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதால் குழந்தைகள் அதிக அளவில் நோய் தாக்கு தலுக்கும் உள்ளாகின்றனர். உடல் மற்றும் அறிவு வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படும். உங்கள் குழந்தையின் வயிற்றில் புழுக்கள் தாக்கியுள்ளதை உங்கள் டாக்டரிடம் சென்று பரிசோதியுங்கள். குழந்தையின் பின்புற மலவழியில் அவர் கண்ணாடிக் குச்சியை செருகி, அதில் கொக்கிப் புழுக்கள் உள்ளனவா என்று பரிசோதிப்பார்.

அங்கு பரவியுள்ள கொக்கிப் புழுக்களை சேகரித்து, அவற்றைப் பரிசோதனைக் கூடத்துக்கு சோதனைக்கு அனுப்புவார். குழந்தையின் பின்பக்கத்தில் காட்டன் துணியை சுற்றி கட்டி, சிறிது நேரத்துக்கு பின் அவற்றில் கொக்கி மற்றும் நாடாப் புழுக்களின் முட்டைகள் உள்ளனவா என்று டாக்டரோ, செவிலியரோ பரிசோதிப்பார்கள். இதைத் தொடர்ந்து, குழந்தைகளின் மலத்தை
சோதனைக்கு எடுத்து, அவற்றில் எந்த வகையான புழுக்கள் மற்றும் முட்டைகள் உள்ளன என்றும் பரிசோதனை செய்வார்கள்.

இத்தகைய புழுக்களினால் நோய்த் தொற்று அதிகமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் இன்னும் பிற அரிய வகை நோய்த் தொற்றுகளுக்கும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
நாடாப் புழு, கொக்கிப் புழு உள்பட பல்வேறு பூச்சிகளின் தாக்குதல்களை வாய்வழி மருந்துகள் மூலமாகவே குணப்படுத்திவிடலாம். குழந்தைக்கு எவ்வகை புழு தாக்கி யுள்ளது என்பதை மருத்துவர்கள் கண்ட றிந்து, அத்தகைய குடல் புழு நீக்கத்துக்கு உண்டான மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.

நீங்களாக மருந்துக் கடைகளுக்கு சென்று, குழந்தைகளுக்கு பூச்சி மருந்துகளை அளிக்க வேண்டாம். குழந்தையின் வயிற்றில் அப்புழு எவ்வகையில் தாக்கியுள்ளது என்பதை
அறியாமல், நீங்களாகவே அளிக்கும் மருந்துகள், குழந்தைக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

* நாடாப் புழு, கொக்கிப் புழு போன்ற பல்வகை புழு தாக்குதல்கள் மிக விரைவாக பரவுவது பொதுவான நடைமுறை என்ப தால், நீங்கள் அனைவருமே குடும்பத்துடன் டாக்டரிடம் சென்று பாதுகாப்புக்காக பரிசோதனை செய்து கொள்ளலாம்.

* குழந்தைக்கு 2 வயதாகும்போது உங்கள் மருத்துவரிடம் சென்று காட்டி, குடற்புழு நீக்கத்துக்கான சிகிச்சைகளை அளியுங்கள்.

* குழந்தைகள் மலம் மற்றும் சிறுநீர் கழித்தவுடன், அதன் உள்ளாடைகளை அடிக்கடி மாற்றுங்கள்.

* உங்கள் குழந்தை நடக்கும்போது, அதன் முழு கால்களையும் மூடியபடி இருக்கும் ஷூக்களை பயன்படுத்துங்கள். ஈரமான மண் மற்றும் சேறு, சகதிகளில் விளையாடுவதை தடுத்துவிடுங்கள். அவர்கள் சுத்தமான, உலர்ந்த பகுதிகளில் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள்.

* குளியலறை மற்றும் கழிவறையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.

* நீங்களும் குடும்பத்தினரும் சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறைக்கு சென்று வந்த பின்னரும் தரமான சோப்பு பயன்படுத்தி கை கழுவுங்கள். உங்கள் குழந்தையையும்
அவ்வாறே செய்வதற்குப் பழக்கப்படுத்துங்கள்.

* குழந்தையின் நகங்களை வெட்டி, சுத்தமாக வைத்திருக்க பழகுங்கள்.

* குடிநீரை காய்ச்சி குடியுங்கள். காய்கறி, பழங்களை நன்கு கழுவியபின் சாப்பிடுங்கள்.

* மீன், இறைச்சி போன்றவற்றை ஃப்ரெஷ்ஷாக, அதன் ஒவ்வொரு பகுதியையும் நீரினால் நன்கு சுத்தப்படுத்தி, வேக வைத்து சாப்பிடுங்கள்.

குழந்தைகளின் வெட்டப்படாத நகங்களின் உட்புறத்தில் தேங்கியுள்ள அழுக்குகள், அழுக்கடைந்த பொம்மை களை குழந்தைகள் வாயில் வைக்கும்போது அதிலுள்ள அழுக்குகள் மூலம் நேரடியாக புழுக்கள் உடலுக்குள் செல்கின்றன.

இப்பூச்சிகளினால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதால், குழந்தைகள் அதிக அளவில் நோய் தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர். உடல் மற்றும் அறிவு வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படும்

No comments: