
என் பெயர் "சனி" எனக்கு மக்கள் என்னை சனிபகவான் என்றும் சிலநேரங்களில் தங்களது வெறுப்பையும் வேதனைகளை வெளிப்படுத்த சனியன் என்றும் அழைப்பார்கள் அதேபோல் என்னை கண்டு அஞ்சுபவர் சனீஸ்வரன் என்றும் அழைப்பார்கள்.. அதேநேரத்தில் என்னை "கரியவன்" என்றும் "முடவன்" என்றும் குரூரன் என்றும் இன்னுப் பல பெயர்களில் என்னை அழைப்பார்கள் இப்படி அழைப்பதல் எனக்கு "வருத்தப்பட போவதும் இல்லை ஆனந்தப்பட போவதும் இல்லை" அதேநேரத்தில் "எனக்கு யாரும் நண்பனும் இல்லை யாரும் பகைவரும் இல்லை" ஆது ஆணாக இருந்தால் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ஏன் அந்த இறைவனாக இருந்தாலும் சரி செய்த பாவத்திற்கான கர்மபலனை நீங்கள் அனுபவித்தே ஆகவேண்டும்"
நீங்கள் என்மீது வெறுப்பை காட்டினாலும் அதற்கு நான் அஞ்சப்போவதும் இல்லை துயரப்பட போவதும் இல்லை ஏனென்றால் நான் இருளை ஆள்பவன் ஆயிற்றே அதாவது மகாவரின் இருளை ஆளும் ஈசன் நான்தான் அதனால் என்னை "சனீஸ்வரன்" என்று அந்த பரமன் என்று மகுடம் சூட்டினார். இந்த பெயர் பட்டம் பதவி இவைகள் மீது எனக்கு ஆசையும் பற்றும் இல்லை.. என்னை படைத்த அம்மையப்பரின் ஆணைக்கு கட்டுப்பட்டு என் கொடுக்கப்பட்ட பொறுப்பை செய்து வருகிறேன். அதேபோல் என் தந்தை சூரியதேவரை போல் காலம் தவறாமல் கடனாற்றி வருவது எல்லோருக்கும் தெறிந்த ஒன்றுதான்...
சரி விசியத்திற்கு வருவோம்!!!
இந்த பிரபஞ்சத்தில் துன்பம், அநியாயம் மற்றும் கொடூரமான அசம்பாவிதங்கள், கொலைகள், மரணங்கள்,குற்றங்கள், இப்படி பல பாவங்கள் நடந்தால் அதற்கு உடனே என்னை காரணம் காட்வது உங்களுக்கு வழக்கம் ஆகிவிட்டது ஏனென்றால் பாவ பலனை தருவதில் "ஈஸ்வர பட்டம்" பெற்றவனாயிற்றே அதனால் இந்த உலகில் நடக்கும் அனைத்து துன்பங்களுக்கும் நான் தான் பொறுப்பேற்று வருவது உங்களுள் எத்தனை பேருக்கு தெறியும்???
இத்தனை சம்பங்களும், துயரங்களும் நடப்பதற்கு காரணம் மக்களாகிய நீ மட்டுமே காரணம் எப்படி என்று கேட்கிறீர்களா!!!
"அரசன் செய்த பாவங்கள் மக்களை சாரும்" மக்கள் செய்த பாவங்கள் அரசனை சாரும்"
என்கிற விதியின் மக்களும் அரசனும் நேர்மை மற்றும் தர்மத்தை தவறி தனது கொடுப்பட்ட கர்மத்தையும் பொறுப்பையும் நோக்கத்தையும் மறந்து அதர்ம பாதையில் பல பாவச்செயல்களை செய்து வருகிறீர்கள்
அரசன் செய்யும் பாவங்கள் என்னவென்றால் மக்களுள் ஒருவனாக தேர்தெடுக்கப்படும் அரசன் நீதி நேர்மை தவறாமல் நாட்டையும் நாட்டு மக்களையும் பேணிகாத்து தேசபற்றுடனும் இறைப்பற்றுடனும் சமூகநலப்பற்றுடனும் ஆட்சிசெய்யவேண்டும் ஆனால் அரசன் அப்படி நடந்துகொள்கிறார்களா???
இல்லை!!!
ஆணவத்தின் உச்சத்தில் நின்றுகொண்டு அதிகார துஷ்பிரயோகம், சட்ட திட்டங்களை முறையாக செயல்முடியாத நிலை, மக்களின் வரிபணத்தை தவறான வழியில் பயன்படுத்துதல், சொகுசு வாழ்கை, ஊழல், கொள்ளை, கால்பதிக்கும் அனைத்து துறைகளிலும் ஊழல், ஏமாற்றம், கொள்ளை கோவில் ஆக்கரமிப்பு கோவில் சொத்துக்களை தவறான வழியில் பயன்படுத்துவது, அந்நிய தொடர்பு, பாரபட்ச ஆளுமை,லஞ்சம் செல்வந்தர்கள், பெரிய இடத்து நபர்கள் பாவங்கள், குற்றசெயல்களுக்கு துணைபோகுதல் செய்த பாவங்குக்கான காசுக்காகவும், சுயநலத்திற்காக தண்டனை வழங்காமல் அப்பாவி மக்களுள் சிலர் மீது பொய் வழக்கு பதித்து அவர்களை தண்டிப்பது செய்த பாவங்களை மறைக்க மற்றோர் மீது பொய் வழக்கு பொடுவது, சரிவர நிர்வாகத்தை கவனிக்காமல் அலட்சியமாக நிற்பது, நாட்டின் இறையாண்மை மீறுதல் அதற்கு எதிரான குற்றங்களை இழைத்தல், தெய்வத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம், அகம விதிகளை மீறுதல், மதமாற்றம், நாட்டின் பாரம்பரியம், கலச்சாரம் ஆகியவை சிர்குலைக்கும் வகையில் செயல்படுவது தெய்வத்திற்கு எதிராக குற்றங்களை புரிதல் இறையாண்மை, நீதிநெறி, நேர்மை, தர்மம் ஆகியவை மறந்து நாட்டில் நடக்கும் அசம்பாவிதங்கள், குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அதிகரித்து வருகின்றன இப்படி பல வகையிலான கொடுங்கோல் ஆட்சியை செய்து வரும் அரசனின் ஆட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வறுமையின் உச்சத்திற்கு ஆளாகியுள்ளார்கள் இப்படி கொடிய பாவங்களை செய்யும் அரசனை தலைவனாக தேர்ந்தெடுத்து மக்களின் குற்றமே!!! கொடுத்த. ஓட்டு உரிமையை தவறாக பயன்படுத்துவது காசை வாங்கி ஓட்டு போடுவது இப்படி தவறான வழியில் கொடுக்கப்பட்ட ஓட்டுரிமையை பயன்படுத்தியதன் விளைவால் வந்தது இந்த கொடிய பாவங்கள் அதேநேரத்தில் மக்கள் அரசுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவது , சட்டதிட்டங்களை மீறுவது, ஏமாற்றவது, பாலியல் குற்றம், விபச்சாரம், திருட்டு, களவு, சுயநலம், குடும்பத்தை கைவிடுதல், பேராசை, பணவெறி, அரசிற்கு வரிகட்டாமல் ஏமாற்றுவது சொத்துவெறி, இவைகளுக்காக பல குற்றங்களை இரக்கமில்லாமல் செய்வது ஆணவம், இறைவனை மறந்துபோகுதல், தெய்வத்திற்கு எதிரான குற்றம், தேசத்திற்கு எதிரான குற்றம், தேசதுரோகம், தீவிரவாதம், இறைவன் மற்றும் அரசன் செய்த உதவிக்கான நன்றியை மறந்துபோகுதல், இப்படி பல கொடிய பாவங்களை செய்தும் தர்மத்தையும் நீதியை மறந்துவிட்டீர்கள் ஆகவே இவ்வளவு கொடிய பாவங்களை மக்கள் செய்தற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் ஏனென்றால் முறையான சட்டதிட்டங்களை கொண்டுவராததும், தவறான திட்டங்களை (மது) நடைமுறைபடுத்தியதும், செய்த குற்றங்களை நியாயப்படுத்துவதும் இப்படி பாவம் செய்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது பாரபட்சம் உள்ள ஆட்சி, அரசுடைமைகளை தனியாருக்கு விற்பது, தவறு செய்யும் அதிகாரிஎளை தண்டிக்காமல் இருப்பது இப்படி நாட்டிற்கு எதிரான குற்றங்களை புரிந்ததன் விளைவாக" மக்கள் செய்யும் பாவங்களுக்கு அரசனை தான் சாரும்"
ஆகவே தர்மத்தையும் நீதியையும், தவறிய அரசனையும், மக்களையும் எனது வக்கிர பார்வையின் மூலம் அவர்களை கண்காணித்து தண்டிக்கிறேன் நீதி தவறிய நீதிமன்றங்கள் இங்கே அதிகம் மக்கள் பெரும்பாலோர்க்கு அங்கே செல்வதால் நீதி கிடைப்பதில்லை நீதி தேவதை இறந்துவிட்டாள் ஆகவே இந்த பிரபஞ்ச நன்மைக்காக இறைவனால் வகுக்கப்பட்ட சட்டங்களை மதித்து அதற்கான தண்டனைகளை வழங்கி வருகிறேன் மற்றவர்கள் கண்களுக்கு சமூதாயத்தில் இது பாவச்செயலாக தெறியும்
" பாவத்தை பாவத்தால் கழுவவேண்டும்"
என்கிற வாக்கின்படி மக்கள் செய்த பாவங்களும் சரி தனிப்பட்ட முறையில் மனிதன் செய்யும் பாவங்களும் சரி அந்த பாவத்திற்கான பலனை அனுபவித்தே ஆகவேண்டும் ஆகவே உங்கள் கண்களுக்கு நான் தவறாக தெறிந்தாலும் அதைபற்றி எனக்கு கவலை இல்லை ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தில் சமத்துவம், சமநிலை ,தர்மம், மற்றும் நீதி எப்போது உதயமாகிறதோ அப்போதுதான் இந்த சனீஸ்வரன் உங்களுக்கு அருள்புரிவான் அதுவரை பாவம் இருக்கும் இடங்களில் அதை விரட்ட சனியாகிய நான் அங்கே குடியிருப்பேன் அதேநேரத்தில் அணுதினமும் நான் உங்களை கண்காணித்து கொண்டே இருப்பேன்!!! எனது வக்கிர பார்வையில் இதுவரை எவரும் தப்பியதில்லை ஆகவே மக்களாக இருந்தாலும் சரி, அரசனாக இருந்தாலும் சரி, இறைவனாக இருந்தாலும் சரி எனது கண்காணிப்பிலிருந்து
"ஓடமுடியாது, ஒழியமுடியாது,
தப்பவும்முடியாது"
தற்போது இந்த பிரபஞ்சம் கொடிய நோயின் மூலம் மக்கள் மற்றும் அரசன் தாங்கள் தங்கள் செய்த பாவங்களுக்கான கர்மபலனை செய்து வருகிறது இதற்கும் நான் தான் காரணம் ஏனென்றால் உங்களை திருத்தி இந்த பிரபஞ்சத்தில் சமநிலை, தர்மத்தை கொண்டு வருவது எனது தலையாய கடமையாகும் ஆகவே செய்த பாவங்களுக்காக "பாவத்தின் சம்பளம் மரணம்" என்கிற விதிப்படி மரண தண்டனையை தற்போது நான் வழங்கியுள்ளேன் தண்டனை காலம் முடியும் வரை அனுபவித்தே ஆகவேண்டும் இதற்காக நீ இறைவனை வணங்குவதால் ஒரு பலனும் கிட்டாது ஆனால் தண்டனை காலம் முடிந்ததும் நிச்சயம் பலன் உண்டு என்றும் வராத இறைபக்தியும், தேசப்பற்றும், ஒற்றுமையும் வந்திருப்பது நான் வழங்கிய கர்மபலனில்தான் என்பதை யாரும் மறக்கவேண்டாம் அதேநேரத்தில் செய்த நன்றியை மறக்காமல் இறைவனை மறக்காமல் நீதிநெறி தவறாமல் தர்மத்தை அரசனும், மக்களும் பின்பற்றவே இந்த கர்மபலன் நாட்டையே உலுக்கிய மருத்துவரின் பாலியல் குற்றத்திற்கான தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்டியதும் நான் மகரத்தில் ஆட்சிக்கு வந்தபிறகுதான் அதேபோல் பாலியல் குற்றங்கள் குறைய தனி சட்டங்களையும் கொடிய தண்டனையும் அமல்படுத்தபட்டது நான் ஆட்சிக்கு வந்த காலத்தில் தான் என்பதை யாரும் மறக்கவேண்டாம் அதேநேரத்தில் இனிவரும் காலங்களில் பொய்யர்களும், தீயவர்களும், குற்றவாளிகளும் எனது பார்வையின் மூலம் வெளிச்சத்திற்கு வருவார்கள் அவர்கள் செய்யும் பாவங்களுக்கான தண்டனை எனது பாணியில் வழங்குவேன்!!! அதேநேரத்தில் நானும் உங்களை எச்சரிக்கிறேன்!!!!!
எனது பார்வையில்!!!!
ஓடமுடியாது!!!
ஒழியமுடியாது!!!
தப்பமுடியாது!!!
No comments:
Post a Comment