கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, April 8, 2019
கருப்பு_உளுந்து — நன்மைகளும், பயன்களும
்
சங்க இலக்கியங்களில் உளுந்து:
சங்க இலக்கியங்களில் “உந்தூழ்” எனும் சொல் உளுந்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
உந்தூழ் — வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம்
ஊழ் — முளையில் தோன்றும் கருமரபை குறிக்கும்
“இணர் ஊழ்த்தும் நாறா மலர்” என வரும் திருக்குறள் இதன் பொருளை உணர்த்தும்.
குறிஞ்சிப்பாட்டு :
“உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்”
உரி நாறல் = தோல் வெடித்து நாற்று ஆதல்
அமிழ்து ஒத்து= அமிழ்தம் ஒத்தது
குறிஞ்சி பாட்டு உளுந்தினை “உணவுப் பயறு வகைகளில் உழுந்து அமிழ்தம் ஒத்தது” என குறிபித்துவதில் இருந்தே அறியலாம் நம் முன்னோர்கள் உளுந்தின் பெருமையை நன்கு புரிந்து வைத்து இருந்தனர் என்று
#உளுந்தின் — பயன்கள்
#உடல் வலு பெற:
கடும் நோயில் இருந்து மீண்டவர்களும் , உடல் பலவீனமானவர்களுக்கும் உளுந்து ஒரு வர பிரசாதம்.
இவர்கள் உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ, அரிசியுடன் கலந்தோ உண்டு வந்தால் தேகம் வலுவடையும். எலும்பு, தசை, நரம்புகள் ஊட்டமடைந்து உடல் வச்சிரமாகும்.
நாட்டு உணவுகளில் சாப்பிடும் உணவின் ருசியை அதிகரிக்கவும், உடலுக்கு சக்தியை தருவதற்கும் பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அப்படி நம் சமையலில் அதிகம் உபயோகப்படுத்துதப்படும் ஒரு பருப்பு வகை தான் “#உளுந்து”. இந்த உளுந்து பருப்பை, “#உளுந்து_களி” ஆக்கி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
#சிறுநீரகம்
சிறுநீரகங்களில் கழிவு உப்புகள் தங்கி கற்களாக உருமாறுவது உடல்நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். வாரமொருமுறை உளுந்து களியை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்படும். சிறுநீரகங்கங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். சிறுநீரை நன்கு பெருக்கி உடலில் இருக்கும் கழிவுகளை எல்லாம் வெளியேற செய்யும்.
#ஊட்ட_உணவு
உளுந்து அபரிமிதமான இரும்பு சத்தை தன்னகத்தே கொண்டது. உடல் உழைப்பு அதிகம் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள், பெண்கள், குழந்தைகள் போன்றோர்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறையாவது உளுந்து களியை சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். எளிதில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் திறனை கொடுக்கும்.
#நரம்பு_கோளாறுகள்
உடலின் சரியான இயக்கம் மற்றும் செயல் பாட்டிற்கு நரம்புகளின் செயல் இன்றியமையாதது. நரம்பு தளர்ச்சி, ஹிஸ்டரியா, சிர்சோபீர்னியா, ஞாபக மறதி போன்ற நரம்புகள் தொடர்புகொண்ட வியாதிகளால் அவதிப்படுபவர்கள் தினமும் காலை உணவின் போது உளுந்து களி சாப்பிடுவதால் மேற்கூறிய வியாதிகள், பாதிப்புகள் முற்றிலும் நீங்கும்.
#நீரிழிவு
நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியான விகிதத்தில் இருப்பது அவசியமாகும். உளுந்து களியை அவ்வப்போது சாப்பிடும் நீரிழிவு நோயாளிகளுக்கு உளுந்தில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து சாப்பிடும் உணவுகளில் இருக்கும் சத்துக்களை உடலின் சேர்த்து, ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை சரியான விகிதத்தில் வைத்து, நீரிழிவு பாதிப்பு கடுமையாகாமல் காக்கிறது.
#தசை_பலம்
உடலின் வலிமைக்கு காரணமாக இருப்பது தசைகள் தான். கடினமாக காரியங்கள் செய்வதற்கு உடலில் தசைஅடர்த்தி அதிகமாகவும், வலிமையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். உளுந்து களியை தினந்தோறும் இருவேளை சாப்பிட்டு வருபவர்களுக்கு தசைகள் நன்கு வலிமையடையும். உடல் மிகவும் மெலிந்தவர்கள் உளுந்து களியை அவசியம் சாப்பிட வேண்டும்.
#ஆண்மை_குறைபாடுகள்
போதை வஸ்துக்களை அதிகம் உபயோகிப்பதாலும், வெப்பமான சூழல்களில் அதிகம் இருப்பதாலும் சில ஆண்களுக்கு உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு, மலட்டு தன்மை ஏற்படுகிறது. உளுந்து களி இத்தகைய பாதிப்பை கொண்ட ஆண்களுக்கு சிறந்த இயற்கை உணவாகும். உளுந்து களியை வாரம் நான்கு முறை சாப்பிடுவது ஆண்களின் மலட்டுத்தன்மை, ஆண்மை குறைபாடுகளை நீக்கும்.
#கர்ப்ப_கால_உணவு
கருவை வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணி பெண்களுகள் அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க கூடிய உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். உளுந்து களி சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து அதிகரித்து தாய்க்கும், சேய்க்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் உளுந்து களி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
#இதயம்
உளுந்து பொட்டாசியம் சத்துக்களை தன்னகத்தே அதிகம் கொண்டது. உளுந்து களி சாப்பிட்டு வந்தால் இதிலிருக்கும் பொட்டாசியம் சத்து, உடலில் ரத்த அழுத்தத்தை சீராக்கி, ரத்தத்தை உடலில் பாய்ச்சும் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தங்களை குறைகிறது.
#உடல்_சூடு_தணிய:
உடலின் பாதிக்கு மேற்பட்ட நோய்க்கு உடல் சூடு காரணமாக இருக்கின்றது.
#மன_அழுத்தம்,
ஓய்வில்லா உழைப்பு,
தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு அதிகமாகிறது.
சுக்கு, வெந்தயம், தவிடு நீக்காத பச்சரிசியுடன் உளுந்து சேர்த்து, பனை வெல்லம் கலந்து களி செய்து சாப்பிடால் உடல் சூடு தணியும்.
தாது விருத்தியாக:
உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும்.
விழுந்தால் உளுந்து உண்:
தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.
#இடுப்பு_வலுப்பெற
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.
உக்காந்து கொண்டே அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் வாரம் ஒரு முறையாவது உளுந்து கஞ்சி/களி சாப்பிடுங்கள்.
குழந்தைகளுக்கு:
சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...