Monday, April 8, 2019

வெந்தயம்


பல நூறு ஆண்டுகளாக நம் முன்னோர்களால் மதுமேக(சர்க்கரை) நோயை கட்டுப்படுத்த பாரம்பரியமாக வெந்தயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல ஆய்வுகளின் மூலம் வெந்தயத்தில் 4 - ஹைட்ராக்சில் ஐசோலூசின் (4 - Hydroxyisoleucine) எனும் அமினோ அமிலம் நிறைந்துள்ளதாக கண்டறியப்பட்டது.
இந்த 4 - ஹைட்ராக்சில் ஐசோலூசின் (4 - Hydroxyisoleucine) கணயத்தில் உள்ள செல்களை புதுப்பித்து , இன்சுலின் சுரப்பதை மேம்படுத்துகிறது. மேலும் இது தசைகள் மற்றும் கல்லிரலில் உள்ள இன்சலின் தடுப்பை (Insulin resistance)
குறைத்து உடலின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.மேலும் இந்த 4- ஹைட்ராக்சில் ஐசோலூசின்
(4 - Hydroxyisoleucine) இரத்ததில் உள்ள கெட்ட கொழுப்பை ( LDL, TGL) குறைத்து , நல்ல கொழுப்பை (HDL) அதிகப்படுத்துகிறது.இதனால் வெந்தயம் Type ll Diabetes மற்றும் உடல் பருமனுக்கும் வரபிரசாதமாக அமைகிறது.
வெந்தயத்தை முளைகட்டி சாப்பிடும்
போது அதில் உள்ள 4-ஹைட்ராக்சில் ஐசோலூசின் (4 - Hydroxyisoleucine) 40% அதிகமாகிறது என கண்டு அறியப்பட்டுள்ளது.

முளை கட்டிய வெந்தயத்தை, மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன் எடுத்துக்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு
கட்டுப்பாட்டிற்க்குள் இருக்கும்.