Saturday, April 6, 2019

சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி ? தேன் இனிக்க மட்டும்தான் செய்யுமா ? தேனின் நிறம் அடற்த்தி என்ன ? தேனில் உள்ள சத்துக்கள் என்ன ? தேனுடன் எதை சாப்பிட்டால் சத்துக்கள் அதிகம் ?







பழங்காலம் முதல் இன்று வரை தேனிற்கு இருக்கும் மௌசு சிறிதும் குறையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. விருந்து, மருந்து என இரண்டிலும் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது

தேனில் உள்ள மருத்துவ குணங்களை உணர்ந்து பலர் தேனை வாங்குகின்றனர். ஆனால் சிலர் வணிக நோக்கத்திற்காக தேனில் வெள்ளை சக்கரை போன்றவற்றை கலந்து அதன் மகத்துவதையே பாழாக்கு கின்றனர். இந்த நிலையில் நாம் வாங்கும் தேன் சுத்தமானதா என்பதை கண்டறிய சில எளிய வழிகள் உள்ளன. அதை பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

சோதனை முறை 1:

ஒரு சின்ன பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் தேனை விட்டால் அந்த தேன் கரையாமல் அப்படியே பாத்திரத்தின் கீழ் சென்றால் அது நல்ல தேன். இதற்கு மாறாக தண்ணீரில் தேன் கரைந்து போனால் அது சுத்தமான தேன் கிடையாது என்பதை அறிந்துகொள்ளலாம்.

சோதனை முறை 2:

பொதுவாக தேனிற்கு அடர்த்தி மிகவும் அதிகம் ஆகையால் தேனை ஒரு ஸ்பூனில் எடுத்துக்கொண்டு அதை ஒரு கிண்ணத்தில் விட்டால் சுத்தமான தேன் நூல் போல ஒழுகும். இதற்கு மாறாக கலப்படமான தேன் சொட்டு சொட்டாக விழும்.



சோதனை முறை 3:

மை உறிஞ்சும் ஒரு காகிதத்தில் ஒரு சொட்டு தேனை ஊற்றுகையில் அந்த தேன் ஊறி கீழே இறங்கினால் அது கலப்படமான தேன். மாறாக தேன் ஊறாமல் அப்டியே இருந்தால் அது சுத்தமான தேன்.

சோதனை முறை 4:

சிறிதளவு தேனை ஒரு வாணலில் ஊற்றிக்கொண்டு சில நிமிடம் சூடு செய்தால் அதன் அடர்த்தி குறைய துவங்கும். பின்பு சூடு செய்வதை நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் கழித்து பார்த்தால் சுத்தமான தேன் மீண்டும் பழைய அடர்த்தி நிலைக்கு திரும்பும். கலப்படமான தேன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாது.



சோதனை முறை 5:

மணலில் இரண்டு சொட்டு தேனை விட்டு ஒரு நிமிடம் கழித்து ஊத வேண்டும். அப்படி ஊதுகையில் தேன் உருண்டோடினால் அது சுத்தமான தேன். மாறாக தேன் மணலில் ஊறி இருந்தால் அது கலப்படமுள்ள தேன்.

தேன் இனிக்க மட்டும்தான் செய்யுமா என்ன? அப்படி என்னியிருந்தால் அது முற்றிலும் தவறு. தேன் சிறிது கசப்பும் சிறிது துவர்ப்பும் சிறிது காரமும் இருக்கும் அதுதான் ஒரிஜினல் தேன் நாவல் மரத்தின் தேன் இனிப்பு கலந்த கசப்பு சுவை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் அதே போல் வேப்பமரத்தின் தேன் இனிப்பு கலந்த கசப்பு சுவை இருக்கும் வேப்பமரத்தின் தேனை நாட்டு வைத்தியர்கள் அதிகம் விரும்புவர் தென்னை மரத்தில் இருந்து எடுக்கும் தேன் இனிப்பு கலந்த துவர்ப்பு சுவை இருக்கும் கொசு தேன் புளிக்கும் எந்த தேன் சாப்பிட்டாலும் சாப்பிட்டு முடித்தவுடன் சிறிது காரம் இருக்க வேன்டும் அது தான் ஒரிஜினல் தேன்

தேனின் நிறம் என்ன? இந்த கேள்வி ஒரு சிலருக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்யும் தேனும் பெட்டி தேனும் ஒரே நிறத்தில் காணப்படும். ஒரிஜினல் தேன் பருவநிலை மாறும் போது மற்றும் பூவிற்கு தகுந்தவாறு நிறம் மாறுபடும் உதாரணமாக மலை தேன் மஞ்சள் நிறத்தில் காணப்படும் . முருங்கை பூ தேன் இளர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். நாவல் பூ தேன் கருப்பு கலந்த காப்பி நிறத்தில் காணப்படும். வேளஞ்ச தேன் காப்பி நிறத்தில் காணப்படும். குறிஞ்சி பூ தேன் சற்று பச்சை நிறத்தில் காணப்படும். கொசு தேன் பச்சை நிறத்தில் இருக்கும்.‌‌

‌‌‍தேனி‌ல் உள்ள
சத்துக்கள் என்ன

நீர் 17 % முதல் 23% (வரை பருவநிலை மாறும் போது அடர்த்தி தன்மை மாறுபடும்)

கால்சியம் 6mg

இரும்பு சத்து 0.42

மக்னீசியம் 2

பாஸ்பரஸ் 4

பொட்டாசியம் 52

சோடியம் 4

துத்தநாகம் 0.22

கொழுப்பு 0.

தேனுடன் எதை சாப்பிட்டால் சத்துக்கள் அதிகம் முதல் தரமான பேரிச்சை பழம் 50 கொட்டையை நீக்கி விட்டு ஒரு டப்பாவில் போட்டு (பிளாஸ்டிக்கை தவிர்க்கவும்) பேரிச்சை பழம் மூழ்கும் அளவு ‌தேனை ஊற்றி மூடி வைத்து 24 மணி நேரம் கழித்து காலை மாலை 2 தேனில் ஊறிய பேரிச்சை பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். ரத்த சோகை நீங்கும்.. ஹிமோகுளோபின் அதிகரிக்கும்.. உடல் பலம் பெறும் நரம்பு தளர்ச்சி குணமடையும் ஆண்மை அதிகரிக்கும். இன்னும் பல.
ஒவ்வொரு பொருளுககும் ஒரு கலாவதி தேதி உண்டு. ஆனால் தேன் மட்டும் விதி விலக்கு. தேன் 50 ஆண்டுகள் ஆனாலும் கேட்டு போகாத ஒரு பொருள் அதனை சரியான முறையில் பாதுகாத்தால் கண்ணாடி பாட்டிலில் காற்று புகாமல் வைத்தால்,




காடுகளிலும், மலைகளிலும், மரங்களிலும், மரபொந்துகளில்
இயற்கையான முறையில் கூடு கட்டிய

++++அடுக்கு தேன்++++

++++கொம்பு தேன்++++

++++மலை தேன்++++

++++நாவல் தேன்++++

++முருங்கை பூ தேன்++


+++குறிஞ்சி பூ தேன்++