Sunday, April 7, 2019

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா??????



✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. தேங்காய் நீரில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன.

✳ இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி. அமினோ அமிலங்கள், என்சைம்கள், பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி மற்றும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் போன்ற கனிமங்களைக் கொண்டிருக்கும்.

✳ பாஸ்பேடாஸ், டையஸ்டேஸ், மற்றும் இதர என்சைம்கள் போலிக் அமிலம் போன்றவை இந்த நீரில் இருக்கின்றது. ஆகையால் உணவு செரிமானத்திற்கு இது உகந்தது. வயிற்று போக்கு, காலரா போன்ற நோயின் தாக்கத்தால் ஏற்படும் உடல் வறட்சிக்கு தேங்காய் நீர் ஒரு சிறந்த உடனடி மாற்று.

✳ உடலில் இழந்த எலக்ட்ரோலைட் மற்றும் பிளாஸ்மா இருப்புகளை உடனடியாக மீட்கிறது. இதன் மூலம் உடல் நிலை சமன் அடைகிறது.

✳ சைட்டோக்கின்ஸ் மற்றும் லாரிக் அமிலம் ஆகிய இரண்டிற்கும் வயது மூப்பை தடுக்கும் குணங்கள் உள்ளது.

✳ இவை சருமத்தின் pH நிலையை சமன் செய்கிறது. தேங்காய் நீர் உடலின் பளபளப்பை மீட்டு தருகிறது. தேங்காய் நீரில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளதால் தோல் அரிப்பு அல்லது தோல் தொற்றுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.

✳ ரிபோஃப்ளேவின், ஃபைடோஜெனிக் அமிலம், தியாமின் போன்ற வைட்டமின்கள் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்.

✳ தேங்காய் நீரில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் எலும்புகள் திடமாகவும் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

✳ தேங்காய் நீரில் அதிகமான அளவு பொட்டாசியம் உள்ளது. அதனால் இந்த நீரை பருகுவதால், சிறுநீரக கற்கள் கரைந்து விடுகின்றன. மேலும் மறுமுறை புதிய கற்கள் சேராமலும் இருப்பதையும் உறுதி செய்கின்றன.

✳ தேங்காய் நீரில் சர்க்கரையின் அளவு மிக குறைவாக உள்ளது. இதன் கலோரிகளும் குறைவாக உள்ளதால் நீரழிவு நோயாளிகளும் இதனை பயன் படுத்தி பலன் அடையலாம்.