Monday, April 8, 2019

கொடுத்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா..?


நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள் .கண்டிஷன் தயவு கூர்ந்து ... மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம், நல்ல ஒரு விஷயத்திற்காக இருக்க வேண்டும்..நேர்மையான பணமாக இருக்க வேணும்.
.. ஓம் நமோ நாராயணாய

பரிஹாரம் 1 )
ஒவ்வொரு மனிதனும் தங்களுடைய வாழ்கையில் சகல ஐஸ்வர்யமும் பெற பல உள்ளன. அதில் குறிப்பாக, நாம் கொடுத்த பணம் நமக்கு திரும்ப கிடைக்கவில்லை என்றால், சில பரிகாரம் செய்வதம் மூலம் மிக விரைவில் நம்மை வந்து சேரும் என்பது ஐதீகம்...

பரிகாரம் செய்யும் முறை

முதலில் கிழக்கு பக்கமாக அமர்ந்து, ஒரு இலையை தரையில் வைத்து, அதன் மீது பச்சை கற்பூரத்தை ஏற்ற வேண்டும்....பின்னர்,பெரு தட்டை எடுத்து, கற்பூரம் மீது மூடி வைக்க வேண்டும்...

கற்பூரம் எரிய எரிய, அந்த தட்டு கருப்பு நிறமாக மாறும்..அதாவது புகை வர வர,அது வட்டமான தட்டின் உட்பகுதியில் படிந்து கருமையாக மாறும்..

இந்த கரியை தொட்டு தெற்கு பக்கமாக அமர்ந்து,ஒரு தூய்மையான வெள்ளை நிற பேப்பரில்,யாரிடமிருந்து பணம் வர வேண்டுமோ அவற்றின் பெயரை நடு விரலில் எழுத வேண்டும்....

அவ்வாறு எழுதும் போது,அந்த நபரின் முகத்தை மனதில் நினைத்துகொள்ள வேணும்..மேலும் பணம் விரைவில் வர வேண்டும் என நினைத்துக் கொள்ள வேண்டும்

கண்டிஷன்

மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம், நல்ல ஒரு விஷயத்திற்காக இருக்க வேண்டும்..

நேர்மையான பணமாக இருக்க வேணும்...

உண்மையில் நீங்கள் உழைத்து,உங்களுடைய பணத்தை கடனாக கொடுத்திருந்தால் இதனை செய்யலாம் என பணவளகலை தெரிவித்து உள்ளது.

இவ்வாறு செய்து பணத்தை திரும்ப பெற்று விட்டால்,ஒரு பத்து பேருக்காவது உணவளித்து மகிழ்ச்சி அடைவது நல்லது என்பது ஐதீகம்....

பரிகாரம் 2 )நரசிம்மர் பிரார்த்தனை

நீண்ட நாள் கடன்கள் அடைய சிறப்பான பரிகார
நீண்ட நாட்களாக கடன்கள் அடையாமல் அவதிப்படுபவர்கள், கொடுத்த கடனை வசூலிக்க முடியாதவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்க்கலாம்.
நீண்ட நாள் கடன்கள் அடைய சிறப்பான பரிகாரம்

நீண்ட நாட்களாக கடன்கள் அடையாமல் அவதிப்படுபவர்கள், கொடுத்த கடனை வசூலிக்க முடியாதவர்கள் இந்த எளிய பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

தொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு திரியிட்டு வடக்கு நோக்கி வைத்து மல்லிகைப்பூ எண்ணெயில் ('ஜாஸ்மின்' எண்ணெய்) விளக்கேற்றி, 'நரசிம்ம பிரபத்தி' 9 முறை கூறி வழிபட்டு வர, கடன்கள் அடைய வழி பிறக்கும்.

மேலும் இந்த பரிகாரத்தை செய்ய செவ்வாய் ஹோரையில் காலை 6.15 - 7 மணி மிக சிறந்தது. முடியாதோர், மாலை செவ்வாய் ஹோரையில் 8.15 - 9 மணிக்குள் செய்யலாம். ஜாஸ்மின் (மல்லி) எண்ணெய் பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கிறது. மேற்கண்ட பிரார்த்தனை முடிவில் நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்வது அவசியம். பரிகாரம் செய்யும் நாளில் முட்டை முதற்கொண்டு அசைவம் முற்றிலும் தவிர்க்கவும்.

ஓம் நமோ நாராயணாய