Sunday, November 3, 2019

காஞ்சி மஹாப் பெரியவர்-55 " அதிக வட்டி வாங்கி சம்பாதிக்காதே!"


காஞ்சி மஹாப் பெரியவர் பல்லக்கில் ஒரு முறை சென்று கொண்டிருந்த போது கீழே இறங்க திரையை விலக்குவதும் பின் மூடுவதுமாக இருந்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஒருவர் பல்லக்கின் அருகில் வந்து தரிசனம் பெற முட்டிமோதி முயன்று கொண்டிருந்தார். என்ன காரணம் என ஓரளவு புரியத் தொடங்கியது. அந்த பக்தர் தான் காரணம்!.அந்த பக்தரும் விடாமல் முயன்றார். பெரியவர் திரையை விலக்கியதும் " பெரியவா உங்கள் தரிசனத்திற்கு வந்திருக்கேன். ஆனா பெரியவா பல்லக்கிலிருந்து இறங்கலையே என தாபப்பட்டேன் !" என்றார்.
" நீ அதிக வட்டி வாங்குறியோ?! அதிக வட்டி வாங்காதே. இருக்குற பணத்த பேங்க்ல போட்டுடு. அதுல வர்றது போதும். தப்பான வழில சம்பாதிக்காதே!" என்று ஆசி வழங்கினார். அவரும் அவ்வாறே செய்வதாக சொல்லிச் சென்றார்.