அன்பு குழந்தையே... மனிதனாக பிறந்தாலே கர்மாவின் பலனை அனுபவிக்க வேண்டும். இந்த கர்மாவை மனதார ஏற்க வேண்டும். நீ செய்த கர்மா உன் மூலமாகவே நிவர்த்தி செய்ய வேண்டும்.
நான் என்னும் அகங்காரம் ஆனவம் உன்னை கர்மாவியிலிருந்து விடுதலை தராது. நீ செய் கின்ற ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதில் யார் மனமு ம் பாதிக்கபடாமல் நல்லோர் இதயங்களில் பதிய வேண்டும்.
இல்லறவாசிகள் தங்கள் குடும்ப பாரத்தை ஏற்று நல்லறம் போதித்து உங்கள் கடமைக ளை திறம்பட முடிக்க மனதை நற்சிந்தனை யால் நிரப்ப வேண்டும்.
உன் முன்னால் இருப்பவன் நல்லவனா கெட் டவனா என்று ஆராய்வதைவிட, நீ நல்லவனா கெட்டவனா என்று ஆராய்ந்து வா.அனைத்தும் அறிந்தவர் இவ்வுலகில் இல்லை. படிப்பு உன் தரத்தை உயர்த்தும்.
சத்தியதர்மம் உன்னை இறை தன்மைக்கு அழைத்து செல்லும். இறைவனை தேடி அலை யாதே. இருக்கும் இடத்திலே அறிய முயற்சி செய். வாழும் வரை நீ எடுக்கும் முடிவே நிரந் தரம். அதில் சத்தியம் ஒளிரட்டும்.
இதுவே இறை நாட்டம். கோடி செல்வம் வந்தா லும் அது உன்னை விட்டு விலகினாலும் மனம் கலங்காதே. தாய் தந்தை மகன் மகள் அண்ண ன் தம்பி மனைவி கணவன் உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லாம் நீ வாழும் வரை தான்.
எதுவும் நிரந்தரம் இல்லை. இயற்கை உனக்கு கொடுத்ததை ஓர் நாள் பறி த்து கொள்ளும். இயற்கை தாய்க்கு மரியாதை செலுத்து. உன் கடமை உணர்வை என்றும் மன பூர்வமாக உண்மையுடன் அறிந்து செயல் படுத்தி வா.
எது உன்னை நோக்கி வந்ததோ மனதார ஏற்று அதை வைத்து வாழ்ந்து விடு. மனதில் கற்ப னை வளர்த்து ஏகபோக வாழ்க்கைக்கு முற்ப டாதே. எதுவாயினும் அது உன் கர்மாபடியே நடக்கும். இதை நம்பு.
நீ நல்லவன் என்பதை உன் மனம் ஊர்ஜிதம் செய்யும் வரை போராடு. சத்தியம் கொண்டு வென்றுவிடு. நான் இருக்கிறேன் நம்பிக்கை யோடு இரு..நிச்சயம் உயர்ந்த நிலைக்கு போக போகிறாய்.
ஓம் ஸ்ரீ சாய் ராம்....