Tuesday, November 19, 2019

ராம நாமம்


வீரன் ஒருவனுக்கு கடலில் நடந்து செல்ல ஆசை எழுந்தது. விபீஷணரிடம் அதை தெரிவிக்க, உடனே ஒரு இலையில் எதையோ எழுதினார். அதை அவனது இடுப்பில் கட்டிவிட்டு ‘‘இப்போது நீ தாராளமாக கடலில் இறங்கி நடக்கலாம். ஒருபோதும் மூழ்கமாட்டாய். ஆனால் எந்த சூழலிலும் நான் கட்டியதன் மீது நம்பிக்கை குறையக்கூடாது.’’

வீரனும் தலையசைத்து விட்டு கடலின் ஆழமான பகுதிக்குச் சென்றான். தரையில் நடப்பது போல இயல்பாக நடக்க முடிந்தது. ‘கடலில் மூழ்காமல் என்னாலும் நடக்க முடிகிறதே’ என்பதை எண்ணி மகிழ்ந்தான். சற்று துாரம் போனதும் ஒரு சிந்தனை எழுந்ததும் அப்படியே நின்றான். இடுப்பில் கட்டியிருக்கும் இலையில் என்ன எழுதியிருக்கிறது என எடுத்துப் பார்த்தான்.

‘ஸ்ரீராமஜெயம்’ என்ற மந்திரம் அதிலிருந்தது. ‘ஓ... ராம நாமம்தானா’ என்று ஒரு கணம் அசட்டை எண்ணம் கொண்டான். அந்த கணமே பெரிய அலை வந்து அவனை இழுத்து கடலுக்குள் போனது. தத்தளித்த அவன் ராமநாமத்தை பக்தியுடன் ஜபிக்க மீண்டும் கடல்பரப்பில் நிற்க முடிந்தது.

ஸ்ரீ ராம ஜெயம்.