கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, November 4, 2019
விபரீத ராஜ யோகம்
யோகம் என்பது ஒரு வித நன்மைக்கான அறிகுறி. கிரகங்களின் மூலமாக மனிதர்கள் பெறக்கூடியது. யோகம் என்பதை ஆழ்ந்து பார்த்தால் யோகம் என்ற வார்த்தைக்கு முன்னால் வரும் வார்த்தையை வைத்துத்தான் அதனைக் கூற முடியும்.
யோகம் என்றாலே நன்மைதான் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அதாவது தரித்தர யோகம் என்று கூட ஒன்று உள்ளது. ராஜ யோகம் என்று சொல்லும்போது பலர் வணங்கக் கூடிய மாமனிதனாவான் என்று சொல்வார்கள்
ராஜ யோகம் என்பது எதிர்பார்ப்பதை விட அதிகமான நன்மை கிடைப்பதுதான் ஆகும். நாம் அந்த அளவிற்கு எதிர்பார்த்திருக்கவே மாட்டோம். அது கிட்டினால் அதை ராஜ யோகம் என்று சொல்லலாம்.
6 க்கு உரியவன் 8ல் இருந்தால், 8க்கு உரியவன் 12ல் இருந்தால் அல்லது 8,12 க்குறியவர்கள் 6-ல் இருந்தால் இதெல்லாம் விபரீத ராஜ யோகம். அதாவது “கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜ யோகம்” என்று ஒரு வாக்கு உண்டு.
கெட்ட வீட்டிற்குரிய ஒரு கிரகம், மற்றொரு கெட்ட வீட்டில் போய் அமர்ந்தால் விபரீத ராஜ யோகத்தை உண்டாக்கும். அதாவது மைனஸ் x மைனஸ் = பிளஸ் என்பது போன்றது.
சில நேரங்களில் திறமையே இல்லாதவர்களுக்கு செல்வம் கிடைப்பதும்,உழைக்காதவர்கள் கோடிஸ்வரர்கள் ஆவதும்,நடிக்க தெரியாதவர்கள் கூட பெரிய நடிகர்கள் ஆவதும்,குடிசையில் இருப்பவர் நாட்டை ஆள்பவராக மாறுவதும் இந்த யோகத்தால்தான்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...