Saturday, November 30, 2019

சிவபுராணம் சில துளிகள்........

#நமசிவாய_வாழ்க_வாழ்க.........



சிவலிங்கத்தின் பெருமைகளைப் பற்றி "சிவபுராண'த்தில் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது.

வழிபாட்டிற்கு உகந்த சிவலிங்கத்தைத் தினமும் அபிஷேகம் செய்பவர்களும் அர்ச்சிப்பவர்களும் வாழ்வில் விரும்பியதையெல்லாம் பெறுவர் என்கிறது சிவபுராணம்!

மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை பூஜித்து வழிபடுபவர்களின் வாழ்க்கையில் அவர்களின் விருப்பங்கள் ஈடேறும். மலர்களால் அர்ச்சனை செய்பவர்கள் சித்தியடைவர்.

ரத்தினங்களால் ஆன சிவலிங்கத்தை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

பவழத்தால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை வழிபடுபவர்கள் நிலையான செல்வத்தை அடைவார்கள்.

உலோகங்களால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை வழிபடும்போது தர்மம் செய்த பலன் கிடைக்கும்.

சிவலிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்கள் மட்டுமல்லாது சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்வதால் கிடைக்கும் பலன்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்

சிவபெருமானுக்குக் கோயில் எழுப்புபவர்கள், தங்களது நூறு தலைமுறையில் உள்ள பிதுர்களுக்கு சிவபதவி அடையும் பாக்கியத்தைப் பெற்று தருகிறார்கள்.

சிவலிங்கம் பிரதிஷ்டை செய்பவருக்கும் முக்தி கிடைக்கும்.

சிவலிங்க பிரதிஷ்டை செய்தவரைப் பார்த்து, அதுபோல தானும் சிவலிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று விருப்பம் கொள்பவர்களின் பாவங்கள் அக்கணமே மறைந்து போகும்.

மேலும் அவர்கள் புண்ணியவான்களாகி முக்தியடைவதற்கான தகுதியையும் பெருமையையும் பெற்று விடுகிறார்கள்.

கருங்கல்லால் சிவாலயம் எழுப்புபவர்கள் ஒவ்வொரு கருங்கல்லுக்கும் ஆயிரம் ஆண்டுகள் வீதம் மொத்தக் கற்களுக்குமான ஆண்டுகள் சிவலோகத்தில் இருக்கும் பேறு பெறுகிறார்கள்....