
🐘🐘🐘கோயில் யானை ஒன்று நன்றாக்க் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக்கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்ததாம்.🐘🐘🐘
ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்ததாம்.🐖🐖🐖🐖
🐘🐘🐘யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டதாம்.🐘🐘🐘
🐖🐖🐖அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக்கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்ததாம்.🐖🐖🐖
🐘🐘🐘அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா! நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டதாம்.🐘🐘🐘
அதற்குக் கோயில்யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னதாம்.🐘🐘🐘
“நான் சுத்தமாக இருக்கிறேன், பன்றியின் சேறு என் மேல் விழுந்து விடக் கூடாதே என்று ஒதுங்கினேன். நான் ஏறி மிதித்தால் அது துவம்சம்மாகிவிடும்; ஆனால் என் கால் அல்லவா சேறாகி விடும்!
👇👇👇👇
-இந்தக் கதையின்படி சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு, நாம் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவது நல்லது.