Tuesday, November 12, 2019

அந்த கால உண்மைகள். நமது சந்ததிகளுக்கு கிடைக்காதவை.


எல்லோராலும்
மாமியார் கொடுமைகள்,
நாத்தனார் கொடுமைகள் என்று
சொல்லி கொண்டிருந்த
மருமகள்கள் எட்டு,ஒன்பது குழந்தைகளுக்கு
குறையாமல் பெத்து கொள்வார்கள்.
அதுமட்டுமின்றி குழைந்தைகளை பெத்து போடுவதுடன் சரி!!

அந்த குழந்தைகளை
குளிபாட்டுவது, சாப்பாடு ஊட்டுவது,
உடை துவைப்பது,உடை மாற்றுவது
ஆகிய செயல்கள்
கூட்டு குடும்பமாக இருக்கும்
பாட்டி,அத்தை,பெரியம்மா.
சித்தி போன்ற பெண்களே செய்வார்கள்.
அதுமட்டுமல்ல,இரவில் தூங்க
வைக்கும் போது குழைந்தைகளுக்கு
கதை சொல்லி தூங்க வைப்பார்கள்.

மேலும் ஒரு வீட்டுக்கு அண்ணன் குழந்தைகள்,தம்பிகுழந்தைகள்
பொண்ணு வயித்துகுழந்தைகள் என
சுமார் ஒருடஜன் குழந்தைகள் இருந்தாலும்
அத்தனையையும் அழகாக வளர்த்தவர்கள்.

உண்மையை மட்டுமே பேச வைப்பார்கள்.
எதாவது சிறிய பொய்சொன்னால் கூட
"கொலை செய்த பாவம்போல" நினைக்க வைப்பார்கள்.

குழந்தைகளை அப்படித்தான்
வளர்த்தார்கள்.எதிர்த்து பேச விட மாட்டார்கள்.

கூட்டு குடும்பத்தில்
ஒருவருக்கு எதாவது அடிபட்டு
கொஞ்சம் ரத்தம் வந்தால்
வீட்டில் உள்ள அத்தனை
ஜீவன்கள் கண்களிலும்
ரத்தம் வரும்.
அந்த அளவிற்கு சாப்பாடு போடும்
போது அந்த சாப்பாட்டில்
அன்பு,பண்பு,பாசம் ஆகியவை
கலந்து ஊட்டினார்கள்.

படித்ததில் பிடித்தது.