Thursday, November 14, 2019

ஜாதகர்_செயல்பட_முடியாத_காரணிகள்



ஜாதகத்தில் லக்னாதிபதி நன்றாக இருக்கும் பட்சத்தில் லக்னம் நன்றாக இருக்கும்.
(பாவி சம்பந்தப்படாதவரை)

அப்படி இருக்க அவருக்கு விருப்பமான அனைத்தும் அவராக பெற்று கொள்வார்.(செயல்பாடு,பிறரை நம்புவது,நண்பர்களை தேர்வு செய்வது,விருப்பமான வண்ணங்கள்(கலர்)....)

அதே நேரத்தில் லக்னாதிபதி வலு இல்லாமல் இருந்தால் மாற்று விருப்பங்கள் அவரை ஆக்ரமித்து அவருக்கு சிக்கலை கொடுத்துவிடுகிறது.

(லக்னாதிபதி வலிமை இல்லையேல் அவருக்கு விருப்பமான நல்ல நண்பரை தேர்ந்தெடுக்க முடியாது.)

அதுபோலவே வண்ணங்கள்....

நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக ராசி கற்கள் தேர்வு செய்கிறோம்.

ராசி கற்களின் அடிப்படை என்ன?

கிரகத்திற்கு உரிய கலர்.

லக்னாதிபதிக்கு உரிய கற்கள் போட்டால் தான் நன்மை.நடக்கும் திசைக்கோ அல்லது எதிர் தன்மை உள்ள கிரகத்துக்கோ,ராசிக்கோ போட்டால் நன்மை கிடைக்காது.

#important

#அதுபோலவே #நம்மை #சுற்றி இருக்கும் விஷயங்களும்.(ஆடைகள்,வீட்டு வண்ணங்கள்....,)

லக்னாதிபதி ஏதாவதொரு நிலையில் வலிமை இண்றி இருக்கும் போது(எந்த லக்னத்திற்கும்)

லக்னத்தில் பிற கிரகங்கள்** தனித்து** இருந்தாலும்,திசை நடத்தினாலும்.

லக்னத்தில் #குரு இருந்தால் #மஞ்சள் நிறம்

லக்னத்தில் #புதன் இருந்தால் #பச்சை நிறம்

லக்னத்தில் #சனி இருந்தால் #நீல நிறம்

லக்னத்தில் #சுக்ரன் இருந்தால்
#தூயவெள்ளை நிறம்

லக்னத்தில் #சூரியன் இருந்தால் மங்கலான நிறம் அல்லது பிரகாசமான நிறம் (#சாம்பல்,பழுப்பு வெள்ளை)

லக்னத்தில் #சந்திரன் இருந்தால் #பாதி வெள்ளை நிறம்

லக்னத்தில் #செவ்வாய் இருந்தால் #சிகப்பு நிறம்

#ராகு_கேது பிற கிரகங்களை சார்ந்தே பலன் தரும்,,,,இருந்தாலும் பாப நிலையில்( ராகு கருப்பு மற்றும் கேது செம்பழுப்பு) நிறத்தையும் வெளிபடுத்தும்

இதில் லக்னாதிபதி பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த கிரகம் லக்னத்தை ஆக்கிரமிப்பு செய்து திசை நடத்தினால் தனது வண்ணங்கள் மூலமாகவும் பிரச்சினை தரும்.

இதில் யோகர் என்றால் பாதிப்பு இல்லாமலும், அவயோகரில் பாதிப்பு இருக்க தான் செய்கிறது.