Friday, November 1, 2019

வீட்டில் விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை.:


வீட்டில், காலை 3 மணி முதல் 5 மணிக்குள் விளக்கேற்ற சர்வமங்கள யோகத்தை தரும். மாலை 6 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி, மகாலட்சுமியை வழிபட்டால், வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும்.

காலை விளக்கேற்றும்போது உடல், மனம் சுத்தத்துடன், வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கேற்றும் போது, வாசலில் தண்ணீர் தெளித்துக்கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.

காலை, மாலை விளக்கேற்றும்போது கொல்லைப்புறக் கதவைச் சாத்திடவேண்டும். கொலைப்புறக்கதவு இல்லாதவர்கள் பின் பக்கம் உள்ள ஜன்னல் கதவைச் சாத்தியே விளக்கேற்ற வேண்டும். விளக்கேற்றும்போது, விளக்கிற்கு பால், கற்கண்டு, நிவேதனம் வைத்து வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிட்டும்.

மாலையில், விளக்கேற்றிய பிறகு தலை சீவக்கூடாது. வீட்டைப் பெருக்கிக் கூட்டக்கூடாது. சுமங்கலிப் பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது. துணி துவைக்கக் கூடாது. தலை குளிக்கக் கூடாது.

விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது. விளக்கேற்றிய உடனேயே சாப்பிடக்கூடாது. மாலையில், விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவற்றைக் கொடுக்கக்கூடாது.