Sunday, November 17, 2019

வீட்டில் லஷ்மி தங்காது என்பார்கள்

நெல்,தேங்காய், தானியங்கள்,பால்,தயிர்,பணம்,பொன் எல்லாமே லஷ்மி அம்சமான பொருட்கள்!

இவற்றை மாலை ஆறுமணிக்கு பிறகு யார் கேட்டாலும் கொடுக்ககூடாது என்பார்கள்!காரணம் வீட்டில் லஷ்மி தங்காது என்பார்கள்!

அதாவது மகாலெஷ்மி அதிகாலை நேரத்திலும்,மாலை நேரத்திலும் நம் இல்லம் தேடி வருவதாக ஐதீகம்!

காலையில் வீட்டுக்கு வரும் தேவியை வரவேற்க,சாணம் தெளித்து கோலம் போடுகிறோம்!

அதே போல் மாலையில் விளக்கேற்றி,ஊதுவர்த்தி,சாம்பிராணி போட்டு நறுமணங்களுடன் வீட்டை வைத்துள்ளோம்!

அப்படி வீட்டுக்கு மாலையில் வரும் மகாலட்சுமி,நாம் லெட்சுமி அம்சமுள்ள பொருட்களை கொடுத்தால் அதை பார்த்துவிட்டு"இந்த வீட்டுக்காரர் நாம் வரும் நேரத்தில் நம் வாசம் செய்யும் பொருட்களை மற்றவர்களுக்கு கொடுத்து அலட்சிய படுத்துகிறார் அதனால் இவர் வீட்டுக்கு இனி வரக்கூடாது"என நினைக்குமாம்.

அதனால்தான் லட்சுமி அம்சமுள்ள பொருட்களை மாலை நேரத்தில் கொடுக்க கூடாதோ என்பார்கள்.