Saturday, November 16, 2019

ரிஷப ராசிக்காரர்கள் வழிபடக்கூடிய தெய்வங்கள்:-



1. அசுரகுருவான சுக்கிரபகவானை ராசிநாதனாக கொண்டுள்ள ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரனின் அதிதேவதையான மகாலட்சுமியை தினமும் வழிபட்டு வந்தால் நற்பலன்கள் உண்டாகும்.

2. வெள்ளியன்று அஷ்டலட்சுமி வழிபாடு செய்துவர குருவால் ஏற்படும் கெடுபலன்களும் அட்டம பலன்களும் தீண்டாது.

3. சனியன்று லக்ஷ்மிநரசிம்மரை வழிபட சனி மற்றும் ராகுவால் ஏற்படும் துர்பலன்கள் குறையும்.

4. குறிப்பாக ரிஷப ராசிக்காரர்கள் வருடத்தில் 2 முறை திருப்பதி சென்று வேங்கடநாதனை வழிபாடு செய்து வர குலதெய்வம் தெறியாதவர்களும் அல்லது குலதெய்வம் அறிந்தும் அங்கே போகமுடியாமல் இருப்பவர்களுக்கு குலதெய்வத்தின் அணுகிரகம் கிட்டும்.

5. கிருத்திகை திதியன்று விரதம் கொண்டு வள்ளி தேய்வானையுடன் இருக்கும் கந்தனை வழிபட்டு வர திருமண தடை குடும்பத்தில் உள்ள சங்கடங்கள் விலகி சுபகாரியம் கைகூடும்.

6. தெய்பிறை அஷ்டமியன்று முருகப்பெருமானிற்கு சிவப்புவண்ண மலர்களால் அர்ச்சனை செய்து சந்தன அபிஷேகமும் தரித்து வர செவ்வாயால் ஏற்படும் கெடுபலன்களும் தோஷமும் குறையும்

7. கடன்பிரச்சனையில் உள்ளவர்கள் குபேரலட்சுமியை தினமும் வழிபட பிரச்சனை தீரும்.

8. குருவாயூர் அப்பனை வழிபட்டு வர மனோரீதியான பிரச்சனை விலகி தெளிவு கிடைக்கும்.

9. வெள்ளியன்று வரும் பிரதோஷத்தன்று நந்திதேவரை வில்வ இலைகளால் பூஜித்து வர நோய்கள் விலகி ஆரொக்கியம் உண்டாகும்.

10. தினமும் காயந்திரி மந்திரமும் லக்ஷ்மி காயத்திரி மந்திரமும் ஜெபித்து வர கேதுவால் எற்படும் கெடுபலன்களும் காரிய தடைகளும் விலகி எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும்.

(தொடரும்)...