வாஸ்து சாஸ்த்திரத்தின்படி, ஒரு வீட்டின் முன்வாசல் என்பது அந்த வீட்டின்குடும்பத்தினர் உள்ளே சென்று வருவதற்கு மட்டும் கிடையாது, நல்ல எண்ணங்களை
மற்றும் ஆற்றலை வீட்டினுள் கொண்டு வருவதற்கான ஒரு வழியாகும். "வீட்டின்
நுழைவாயில் என்பது நிச்சயமாக ஒரு நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு
மண்டலமாகும், நாம் ஒவ்வொரு முறையும் வெளி உலகத்திலிருந்து வந்து வீட்டிற்குள்
நுழைகிறோம். எனவே மகிழ்ச்சி மற்றும் நல்ல அதிர்ஷ்டங்கள் அனைத்தும் உள்ளே
நுழைவதற்கான ஒரு சரியான இடம்தான் இந்த வீட்டின் நுழைவாயில்” என்று
சொல்கிறார் மும்பையைச் சேர்ந்த வாஸ்து சாஸ்த்திர ஆலோசனை நிபுணர் நிதேன்
பர்மார். "இதன் விளைவாக, வீட்டின் நுழைவாயில் மிகவும் முக்கியத்துவம்
அளிக்கப்பட்டது, ஏனெனில் இது ஆரோக்கியம், செல்வம் மற்றும் நல்லிணக்கத்தை
ஊக்குவிப்பதோடு இவற்றை எல்லாம் உள்ளே அல்லது வெளிமண்டல ஆற்றல்
ஓட்டத்திலேயே வைத்துள்ளது. மேலும், வீட்டின் நுழைவாயில் கதவானது அந்த வீட்டை
பற்றிய ஒரு நல்ல அபிப்ராயத்தினை முதலிலேயே உருவாக்குகிறது," என்றும் அவர்
குறிப்பிடுகிறார்.
நுழைவாயில் கதவின் திசை
”நுழைவாயில் கதவானது எப்போதும் வடக்கு, வட கிழக்கு, கிழக்கு அல்லது மேற்கு
வாசலாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தெற்கு, தென்மேற்கு,
வடமேற்கு (வடக்குப் பகுதி), அல்லது தென்கிழக்கு (கிழக்குப்பகுதி) போன்ற திசைகளில்
நுழைவாயில் கதவுகளை வைப்பதை தவிர்க்கவும். தெற்கு அல்லது தென்மேற்கு
பகுதிகளில் நுழைவாயில் கதவு அமைந்திருந்தால் அதை ஒரு முன்னணி உலோக பிரமிடு
மற்றும் முன்னணி ஹெலிக்ஸை (சுருள்) பயன்படுத்தி சரி செய்திட முடியும். வடமேற்கு
திசையில் அமைந்துள்ள கதவை, ஒரு வெண்கல பிரமிடு மற்றும் ஒரு பித்தளை ஹெலிக்ஸ்
(சுருள்) மூலம் சரி செய்ய முடியும், தென்கிழக்கு திசையில் அமைந்துள்ள கதவை
செப்பினால் ஆன ஹெலிக்ஸை (சுருள்) பயன்படுத்தி சரி செய்ய முடியும்," என்று பார்மார்
அறிவுறுத்துகிறார்.
வீட்டின் நுழைவாயில் கதவானது வீட்டினுள் இருக்கும் மற்ற கதவுகளை விட
மிகப்பெரியதாக இருக்க வேண்டும் மற்றும் இந்த நுழைவாயில் கதவானது கடிகார
சுற்று முறையில் திறக்கும்படி அமைந்து இருக்க வேண்டும். நுழைவாயில் கதவுக்கு
இணையாக ஒரே வரிசையில் மூன்று கதவுகளை வைப்பதை கண்டிப்பாக
தவிர்க்கவும், ஏனென்றால் வாஸ்து சாஸ்த்திரப்படி இது மிகப்பெரிய குறைபாடாக
கருதப்படுவதோடு, இப்படி கதவு வைப்பதால் அது வீட்டிற்குள் இருக்கும்
மகிழ்ச்சியினையும் பாதிக்கும்.
இதைப்பற்றி மேலும் பார்ப்பதற்கு: புதிய அடுக்குமாடி குடியிருப்பினை
தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய வாஸ்து முறைகள்
நுழைவாயில் கதவிற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள்:
நுழைவாயிலில் இருக்கும் கதவானது மரக்கதவாக இருப்பது மிகவும் சிறந்ததாக
கருதப்படுகிறது.
தெற்கு திசை: இந்த திசையில் இருக்கும் கதவானது மரம் மற்றும் உலோகம்
இரண்டும் சேர்ந்த கலவையினை கொண்டிருக்க வேண்டும்.
மேற்கு: உலோக வேலைப்பாடுடன் இருக்க வேண்டும்.
வடக்கு திசைப்பக்க கதவு: அதிக அளவில் வெள்ளி நிறத்திலான வண்ணத்தில்
இருக்க வேண்டும்
கிழக்கு: மரத்தினால் செய்யப்பட்டிருக்கவேண்டும் மற்றும் குறைந்த அளவிலான
உலோக பாகங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
நுழைவாயில் கதவினை சுற்றி செய்ய வேண்டிய அலங்காரங்கள்
ஒரு சுத்தமான வீடு, குறிப்பாக நுழைவாயில் சுத்தமாக இருக்க வேண்டும், இப்படி
இருந்தால் நல்ல எண்ணங்கள் வீட்டிற்குள் வரும். குப்பை தொட்டிகள், உடைந்த
நாற்காலிகள் அல்லது முக்காலிகள் போன்றவற்றினை வீட்டின் முன்கதவிற்கு அருகில்
கண்டிப்பாக வைக்கக்கூடாது என்று மும்பையை சேர்ந்த முழுமையான மருத்துவராகிய
(ஹோலிஸ்டிக் ஹீலர்) காஜல் ரோஹிரா எச்சரிக்கை செய்கிறார்.
"நுழைவாயிலை சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் தேவையான அளவிற்கு
வெளிச்சம் இருக்க வேண்டும். நுழைவாயில் பகுதியில் வாசலுக்கு எதிர்திசையில்
கண்ணாடியினை வைக்கக்கூடாது, ஏனென்றால் இது நுழைவாயில் கதவின்
பிம்பத்தினை அப்படியே பிரதிபலிக்கும், இதனால் வீட்டினுள் வரும் நல்ல
ஆற்றலை அப்படியே திருப்பி அனுப்பி விடும்," என்று ரோஹிரா கூறுகிறார்.
டெல்லியில் இருக்கும் குடும்பத்தலைவியான தான்யா சின்ஹா, அவர் வசிப்பதற்காக
கிழக்கு பார்த்தவாறு இருக்கும் வீட்டை வாங்கும்முன் கிட்டத்தட்ட ஒரு டஜன்
அடுக்குமாடி குடியிருப்பினை நிராகரித்தார், ஏனென்றால் அவர் பார்த்த அத்தனை
வீடுகளிலும் நுழைவாயிலானது வாஸ்து சாஸ்த்திரப்படி அமைந்திருக்கவில்லை.
"என்னுடைய வீட்டின் நுழைவாயில் கதவானது மிகுந்த கலைநயமுடன்
வடிவமைக்கப்பட்டு, தங்க நிறத்தினால் பூசப்பட்டிருக்க வேண்டும். அந்த கதவில்
ஸ்வஸ்திக் வடிவமானது செதுக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அதில் தங்க நிறத்திலான
பெயர் பலகையும் அமைந்திருக்க வேண்டும். நுழைவாயிலானது எப்போதும் அழகான
வரவேற்பினை அளிக்கும்படியாக இருக்க வேண்டும் மேலும் நான் நுழைவாயிலுக்கு
அருகில் அழகான மஞ்சள் நிறத்திலான விளக்கினை வைப்பேன்," என்றும் அவர்
விளக்குகிறார்.
நுழைவாயிலில் எப்போதும் வாசக்கால் (நிலைவாயிற்படி) இருக்க வேண்டும்,
(பளிங்கு அல்லது மரத்தினால்), இப்படி வாசக்கால் வைப்பதால் இந்த
வாசக்காலானது கெட்ட சக்திகளை எல்லாம் உறிஞ்சிக்கொண்டு, நல்ல
சக்தியினை மட்டும் வீட்டிற்குள் அனுப்பும் என்று நம்பப்படுகிறது. நுழைவாயில்
கதவினை தெய்வீக சின்னங்களை கொண்டு அலங்கரிக்கவும், அதாவது ஓம்,
ஸ்வஸ்திக், சிலுவை, மற்றும் இன்னும் பல., மேலும் தரையில் கோலத்தினை
போட்டு அலங்கரிக்கவும், இவை எல்லாம் நல்ல சகுனங்களாக கருதப்படுவதோடு,
நல்ல அதிர்ஷ்டத்தினையும் வீட்டினுள் வரவழைக்கும்.
நுழைவாயில் கதவிற்கான வாஸ்துவில் செய்ய வேண்டியவை மற்றும்
செய்யக்கூடாதவை
நுழைவாயிலில் எப்போதும் பிரகாசமான வெளிச்சத்தினை தரும் விளக்குகளை
வைக்கவும், சிவப்பு நிறத்திலான விளக்கினை தவிர்த்து விடவும்.
நுழைவாயில் கதவில் தினமும் மாலைப்பொழுது நேரங்களில் விளக்கானது எரிந்து
கொண்டு இருக்க வேண்டும்.
நுழைவாயிலில் இடமிருந்தால், பச்சை பசேல் என்ற தாவரங்கள் மற்றும் செடிகளை
கொண்டு அலங்கரிக்கவும்.
நுழைவாயில் கதவானது 90 டிகிரி கோணத்தில் திறக்கப்பட வேண்டும், உள்ளே
வரும் வழியில் எந்தவொரு தடையும் இருக்கக்கூடாது.
கதவில் இருக்கும் திருகுகளில் எல்லாம் எண்ணெயானது இருக்கிறதா என்பதை
தினமும் உறுதி செய்து கொள்ள வேண்டும் (கதவை திறந்து மூடும் போது
தேவையற்ற சத்தத்தினை தவிர்ப்பதற்கு), மேலும் கதவின் அனைத்து பகுதிகளும்
பளபளப்பாக இருக்க வேண்டும்.
நுழைவாயிலில் உடைந்த மரத்துண்டுகளோ அல்லது மரச்சில்லுகளோ, அல்லது
தவறவிடப்பட்ட திருகுகளோ எதுவும் இருக்கக்கூடாது.
கூடுதலான ஆணிகளை எல்லாம் கட்டாயம் அகற்றிவிட வேண்டும்
எப்போதும் கதவில் பெயர்ப்பலகை இருக்க வேண்டும்.
ஒருவேளை கதவானது வடக்கு அல்லது தெற்கு பார்த்தவாறு இருந்தால், அந்த
கதவில் உலோகத்திலான பெயர்ப்பலகை வைப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
ஒருவேளை கதவானது தெற்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு இருந்தால், அந்த
கதவில் மரத்திலான பெயர்ப்பலகை வைப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.