Monday, November 4, 2019

குரு பகவான் என்பவர் யார்?


ஜோதிடத்தில் சொல்லப்படும் ஒன்பது கிரகங்களில் முதன்மையானவர் பிரகஸ்பதி என சொல்லப்படுகின்ற குருபகவான்தான்.இவர் தொட்டது தொலங்கும்,பார்த்தது விளங்கும்.ஒரு மனிதருக்கு அளப்பறிய நன்மைகளை செய்யக்கூடியவர்.

திருமண யோகத்தை கொடுக்கக்கூடியவர் இவர்தான் இவர் ராசிக்கு 2,5,7,9,11 இருக்கும் போது குருபலம் ஏற்பட்டு திருமண தடை விலகுகிறது.

இவர் தனித்து நிறபதைவிட கிரகங்களுடன் சேர்ந்து இருப்பது சிறப்பு என சொல்லப்பட்டாலும் தனித்து இருந்தாலும் மிகுந்த நன்மைகளையே வழங்குகிறார்.

இவர் பல யோகங்களை ஜாதகருக்கு வழங்கக்கூடியவர் குரு மங்கல யோகம்,கேந்திர யோகம்,கசகேசரி யோகம்,குருசந்திர யோகம் போன்ற மிக முக்கிய யோகங்கள் இவரால் ஏற்படுபவையே.

ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனை விட இவர்தான் வலிமையானவர்.இவர் புனர்பூசம்,விசாகம்,பூராட்டாதி நட்சத்திரகாரகளுக்கும் தனுசு,மீனம் ராசிக்காரர்களுக்கும் நெருங்கிய நண்பர்.

மேசம்,சிம்மம்,விருச்சிகம்,தனுசு,மீனம் போன்ற லக்கின காரர்களுக்கு முழு ராஜயோகத்தை கொடுப்பவர்.ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி ஆகியவை குருவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.

சமூக அந்தஸ்து, அரசியல் பதவி, ஆன்மிக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், தர்ம ஸ்தாபனங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரி கட்டுதல், அறங்காவலர் பதவி, நீதிபதி, கவர்னர் போன்ற அரசு உயர் பதவியில் அமர்வதற்கு குருபகவானின் அருள்கடாட்சம் தேவை.

வழிபாடு - பரிகாரம்

குரு பகவானின் அருள் பார்வை கிடைக்க முருகன் கோயிலுக்கு சென்று வணங்கலாம். திருச்செந்தூர் குரு ஸ்தலமாகும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யலாம். கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குரு பரிகார ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். குரு திசை நடப்பவர்கள், திருமண, குழந்தை பாக்ய தடை உள்ளவர்கள் தினமும் ‘ஓம்பிம சிவய வசி குரு தேவாய நம’ என்று 108 முறை சொல்லி வரலாம்.

குருவுக்கு உரிய அம்சங்கள்

கிழமை: வியாழன்
தேதிகள்: 3, 12, 21, 30
நட்சத்திரங்கள்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நிறம்: மஞ்சள்
ரத்தினம்: கனக புஷ்பராகம்
தானியம்: கொண்டைக் கடலை
உலோகம்: பொன் (தங்கம்)
ஆடை: தூய மஞ்சள்
ராசி: தனுசு - மீனம்
உச்ச ராசி: கடகம்
நீச்ச ராசி: மகரம்