Saturday, November 9, 2019

இரண்டே நிமிடம் தான் ஆகும், இதைப் படியுங்கள். அழகான வர்ணனை.



"ராம ராம " இதை ஜபித்தால் அனுமன் வருவார், உடனே அவர் எஜமான் ராமர் வருவார், கூடவே இணை பிரியா லட்சுமணன் வருவார், ராமன் இருக்கும் இடம் என்று சீதா தேவி வருவாள்,சிவபக்தனாகிய அனுமன் வந்தால் சிவனும் வருவார், சிவன் வந்தால் , சிவன் பார்யை பார்வதியும் வருவாள். சிவன் பூஜிக்கும் லக்ஷ்மியும் வருவாள்,பார்வதி வந்தால், அவள் குழந்தைகள் விநாயகர், முருகன் வருவார்கள், இதை காண பூலோக சஞ்சாரி நாரதர் வருவார், நாரதர் வந்தால் ப்ரும்மா வருவார், ப்ரும்மாவை தொடர்ந்து சரஸ்வதி வருவாள். இதை கண்டு மகிழ தேவாதி தேவர்களும் வருவார்கள். தேவாதி தேவர்கள் வந்தால் அவர்கள் ப்ருந்தாவனத்தில் நிதம் பூஜிக்கும் க்ருஷ்ணன் வருவான் , கூடவே பலராமன் வருவான் , க்ருஷ்ணர் நிழலாக ருக்மணியும் வருவாள், எல்லோரும் வந்த பின், வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் தனியாக இருக்க பிடிக்காமல் அவரும் வருவார். பார்த்தீர்களா, இதுதான் ராம நாமத்தின் மகிமை , ஆகையால் ஜபிப்போம் " ராம, ராம, ராம ராம ".