Saturday, August 10, 2019

திருமலை வாழும் திருவேங்கடவா !

திருமலை வாழும் திருவேங்கடவா ! திருவருள் தர தாயாருடன் எழுந்தருள்வாயே ஏழுமலையப்பா !
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடவா !ஸ்ரீவேங்கட கிரி கூட நிலைய சீருடை புத்த கல்கீ
ஐந்தும் ஐந்தும் அவதார!ஐம்-படைகள் ஏந்தும் மால்-திருவேங் கடம் தனில் வாழும் பெருமாள்!
டோலாயாம் சல டோலாயாம் ஹரே டோலாயாம் பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல், அரி பொன்னூஞ்சல்
திருவேங்கடமுடையானுக்கு என்றே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அன்னமய்யா!பெருமாள் ஊஞ்சலில் வேகமாக ஆடுவதை,அப்படியே வார்த்தைகளில் வேகமாக நகர்த்திக் காட்டுகிறார்!இந்த அன்னமாச்சார்யர் பாடலும் திருவாய்மொழி(3-5-8, 3--5-1) பாசுரங்களை திருவாய்மொழி(6-10-1, 6-10-2) பாசுரங்களை பாடியும் ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாளை போற்றி பாடி திருமகள் அருளுடன் திருமலையப்பன் திருவருளையும் பெற்று வாழ்வோம் திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம்
ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய

வார்புனல் அம்தண் அருவி
வட திருவேங்கடத்து எந்தை
பேர்பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர் என்றே பிறர் கூற
ஊர்பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படு வாரே.

மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர் !
தண் கடல் வட்டத்து உள்ளீரே !

[ ராகம்: சங்கராபரணம் ]
உலகம் உண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி அம்மானே !
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி ! நெடியாய் ! அடியேன் ஆருயிரே !
திலதம் உலகுக் காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே !
குலதொல் அடியேன் உனபாதம் கூடு மாறு கூறாயே.

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல் அசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே !
ஆறா அன்பில் அடியேன்உன் அடிசேர் வண்ணம் அருளாயே.

டோலாயாம் சல டோலாயாம் ஹரே டோலாயாம்
பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல், அரி பொன்னூஞ்சல்

மீன கூர்ம வராக
மிருக பதி அவதார
தானவ அறே குண செளரே
தரணீ தர மரு ஜனக
(டோலாயாம் சல டோலாயாம்)

மீனும் ஆமை கேழலாய்
ஆளரி அவ தாரமாய்
பர...கால குண...வீர
பாரைத் தாங்கும் மாரன் எந்தை
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)

வாமன ராமா ராமா
வர கிருஷ்ண அவதார
சியாமளாங்க ரங்க ரங்க
சாமஜ வரத முர ஹரண
(டோலாயாம் சல டோலாயாம்)

குறள் பல ராமா ராமா
குன்றம் எடுத்த வா-கண்ணா
கருத்த மேனி பொருத்த ரங்க
ஆனைக்கு அருளி, முரனை முடித்து
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)

தாருண புத்த கல்கி
தச வித அவதார
ஷீர பாணே கோ சமானே
ஸ்ரீவேங்கட கிரி கூட நிலைய
(டோலாயாம் சல டோலாயாம்)

சீருடை புத்த கல்கீ
ஐந்தும் ஐந்தும் அவதார!
ஐம்-படைகள் ஏந்தும் மால்-திரு
வேங் கடம் தனில் வாழும் பெருமாள்!
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)

திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம் ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய