Saturday, August 3, 2019

சனீஸ்வரபகவான் அனுக்ரஹமூர்த்தியாக நம் அனைவருக்கும் நல்வாழ்க்கை தந்து நலமுடன் வாழ வைக்க பிரார்த்திப்பம்.

சனிகிரகத்தை மந்தன் என்று சொல்வார்களே அதே போல மிகவும் சனிபெயர்ச்சி தீப ஆரத்தி

தாமதமாக பதிவு செய்துள்ளோம் சனீஸ்வரபகவான் அனுக்ரஹமூர்த்தி திருவடிகளே சரணம்

சனி காயத்ரீ மந்திரங்கள்...

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி

தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி

தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி

தன்னோ சனைச்சர ப்ரசோதயாத்!

ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி

தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!

ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி

தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!

சனி பகவானுக்கான பலன் தரும் ஸ்லோகம்

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்

சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!

அதாவது, கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவரே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாக சஞ்சரிப்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன் என்பது இதன் பொருளாகும்.

சனி பகவானுக்கான பொதுவான பரிகாரங்கள்:

தினமும் வினாயகர் - ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது நற்பலனைத் தரும்.

தினமும் வினாயகர் அகவல் - ஹனுமான் சாலீசா - சுந்தர காண்டம் ஆகியவற்றைப் பாராயணம் செய்யலாம்.

தேவைப்படும் போது மஹாகணபதி ஹோமம் அல்லது பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்வது நல்ல மாற்றம் தரும்.

தினமும் முன்னோர் வழிபாட்டைச் செய்வது - குறைந்தபட்சம் அமாவாசை தினத்திலாவது முன்னோரை வழிபடுவது பலம் சேர்க்கும்.

தினமும் காகத்துக்கு சாதம் வைப்பது மிகச் சிறந்த பரிகாரம்.

சனீஸ்வரபகவான் அனுக்ரஹமூர்த்தி திருவடிகளே சரணம்