Wednesday, August 14, 2019

ஆஞ்சநேயா! உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும் என்று சொன்ன சனி பகவான் பாதிப்பு நீங்க


நாம் ஸ்ரீ ஆஞ்சனேயபிரபுவை வழிபட ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுகிரக மூர்த்தியயக அருள்பாலிக்க அனுமன் வழிவகை செய்வார் அருள்புரிவார் !ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். தினசரி `ராம ராம ராம' நாமம் சொல்வது விசேஷம்.

`ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,

வாயுபுத்ராய தீமஹி, தந்தோ

ஹனுமன் ப்ரசோதயாத்'

என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும். இதையும் சொல்லி வழிபடலாம்.

ஸ்ரீ சீதா லக்ஷ்மண சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமபக்தஅனுமனுக்கு நித்யம் ஜெயமங்களம் ஸ்ரீ ராமஜெயம்

இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருப்பணியில் அனுமன் தீவிரமாக இருந்தபோது வந்தார் சனி பகவான் `ஆஞ்சநேயா! உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல். அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்'' என்றார். ``கடமையை செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து கொள்'' என்றார். சனி பகவானும் ஏறி அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம் தாங்கமல் சனிபகவான் அலறினார். ``சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்'' என்றார் அனுமன். அதன் பிறகே இறக்கிவிட்டார். `ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை' என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன். அனுமனுக்கு துளசி சாத்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

ஆறு பலங்களை அள்ளித்தரும் ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். தினசரி `ராம ராம ராம' நாமம் சொல்வது விசேஷம்.

`ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,

வாயுபுத்ராய தீமஹி, தந்தோ

ஹனுமன் ப்ரசோதயாத்'

என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும். இதையும் சொல்லி வழிபடலாம். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம். வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம். வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். ஆன்ம பலம், மனபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும்.

ஸ்ரீ சீதா லக்ஷ்மண சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமபக்தஅனுமனுக்கு நித்யம் ஜெயமங்களம் ஸ்ரீ ராமஜெயம்