Tuesday, August 6, 2019

கிரக சேர்க்கை: குரு புதன்:


கிரக சேர்க்கை வரிசையில் அடுத்து குரு புதன் சேர்க்கையை பார்ப்போம்.குரு ஆன்மீக அறிவை மனிதனுக்கு கொடுப்பவர்.புதனோ அறிவியல் சார்ந்த தர்க்கம் சார்ந்த அறிவை தருபவர்.

இந்த சேர்க்கை ராசிக்கு ராசி வேறுபட்டவாறு இருக்கும்.குரு தனது அறிவை நன்மைக்காக பயன்படுத்தும் கிரகம்.புதன் அறிவை பணமாக மாற்ற நினைக்கும் கிரகம்.எனவே இந்த எதிர்மறை குணம் கொண்ட கிரகங்கள் சில சமயங்களில் சில சிக்கலை தரலாம்.என்ன சிக்கல் என்றால் இரண்டு கிரகங்களும் யார் பெரியவர் என்கிற ரீதியில் செயல்படாமல் கூட இருக்கலாம்.

அப்பொழுது இருவரும் செயல்பட ஆற்றல் மற்றும் செயல் சார்ந்த கிரகங்களான சனியும் செவ்வாயும் பார்வை செலுத்தும் போது நன்றாக செயல் படும்.அறிவு என்பது இந்த சேர்க்கை பெற்று இருக்கும் போது ஒருவருக்கு மேலோங்கி இருக்கும்.அது இந்த சேர்க்கையின் தனித்துவம் ஆகும்.

அதே போல் இங்கே குறைந்த பாகையில் புதன் இருந்தால் அறிவுசார் குணமும் குரு குறைந்த பாகையில் இருந்தால் ஆன்மீக குணமும் மேலோங்கி இருக்கும்.புதன் உடன் இருக்கும் கிரகத்தை ஒட்டி செயல்படும் கிரகம் என்பதால் இங்கே சுபராகவே செயல்படுவார்.

ஆடிட்டர், வங்கி கணக்கர்,ஆசிரியர், ஆராய்ச்சியாளர் ,ஜோதிடர் போன்ற பணிகளில் இந்த சேர்க்கை பெற்றவர்கள் இருப்பதை பார்க்க முடியும். ஒரு நல்ல கிரக சேர்க்கை இது.
நன்றி.