Wednesday, August 14, 2019

ஆடு இரகங்கள் ஆடுகளில் இரண்டு வகைகள் உண்டு.



🐐 செம்மறி ஆட்டு இனங்கள்

🐐 வெள்ளாட்டு இனங்கள்

செம்மறி ஆட்டு இனங்கள்

இந்திய இனங்கள்

🐐 ஜம்நாபாரி, பீட்டல், பார்பரி, தெல்லிச்சேரி, மலபாரி, சுர்தி, காஷ்மீரி, வங்காள ஆடு ஆகிய இனங்கள் இந்திய இனங்கள் ஆகும்.

அயல்நாட்டு இனங்கள்

🐐 அங்கோரா, ஆல்பைன், சேனன், டோகன் பர்க், ஆங்ளோ நுபியன் ஆகிய இனங்கள் உள்ளன.

வெள்ளாட்டு இனங்கள்

இந்திய இனங்கள்

🐐 ஜமுனாபாரி, பீட்டல், பார்பாரி, தலைச்சேரி, சிரோகி, உஸ்மனாபாடி, கன்னி ஆடு, கொடி ஆடு, சங்தங்கி, செகு ஆகிய இனங்கள் உள்ளன.

அயல்நாட்டு இனங்கள்:

🐐 மெரினோ, ராம்பெளலட், சோவியோட், செளத் டான் ஆகியவையாகும்.

வீட்டு மேலாண்மை

🐐 ஆடுகளை பாதுகாக்க இரண்டு வகையான வீட்டு மேலாண்மை வழிமுறைகள் உள்ளன.

🐐 ஆழ்கூள முறை

🐐 உயர் மட்ட தரை முறை

​ ஆழ்கூள முறை.

🐐 இந்த முறையில் கொட்டகை அமைக்க தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு கடலைப்பொட்டு, மரத்தூள் மற்றும் நெல் உமி ஆகியவற்றை இட வேண்டும்.

🐐 இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புது கூளம் போடவேண்டும். இம்முறையில் உண்ணி மற்றும் பேன் தாக்கம் இல்லாமல் கவனித்துக் கொள்ளவேண்டும். இதில் ஆடு ஒன்றுக்கு 15 சதுர அடி இடம் தேவைப்படும்.

🐐 பலத்த மழைக்காலத்தில், ஆழ்கூளப்பொருட்கள் அதிக ஈரத்தன்மையுடன் இருப்பின் அமோனியா வாயு உற்பத்தி ஆகும். ஆகவே அதிகம் ஈரம்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உயர் மட்ட தரை முறை.

🐐 இந்த முறையில் கொட்டகை அமைக்க தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில் மர பலகை அல்லது கம்பி வலைகளை கொண்டு அமைக்கலாம்.

🐐 இந்த முறையில் ஒட்டுண்ணி தொல்லைகள் மிகவும் குறைவாக இருக்கும்.

தீவன மேலாண்மை.

🐐 ஆடுகளை மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்ச வளர்ச்சி கிடைக்கும். கொளுக்கட்டை புல், ஸ்டைலோ மற்றும் கோ ரக தீவனப் பயிர்களை அளிக்கலாம்.

🐐 தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம். ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்க முடியும்.

🐐 குட்டிகளுக்கு தினம் 50-100 கிராம் வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு அளிக்க வேண்டும். வளரும் ஆடுகளுக்கு தினம் 100-150 கிராம் வரை அடர் தீவனம் 3-10 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்.

🐐 சினை ஆடுகளுக்கு தினம் 200 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும். தினம் பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 300 கிராம் வரை அடர்தீவனம் கொடுக்கலாம். அதிகம் தாமிர சத்து உள்ள வெள்ளாடுகளுக்கான தாது உப்பு கட்டிகளை கொட்டிலில் கட்டி தொங்கவிட வேண்டும்.

தீவனத் தொட்டி.

🐐 அமைக்கப்படும் தொட்டியானது சிமெண்ட் அல்லது மரத்திலானதாகவும் இரண்டு பாகங்கள் கொண்டதாகவும் இருக்க வேண்டும். தீவனம் மற்றும் உலர் தீவனம் வைப்பதற்கு இது உதவும்.

🐐 வைக்கோல் மற்றும் உலர்தீவனத் தட்டு ஒன்றினை ஆடுகளின் தலை மட்டம் அல்லது சிறிது தலைக்கு கீழே அமைத்தல் வேண்டும். தீவனத் தொட்டியினை தரையிலிருந்து 450 மிமீ முதல் 600 மிமீ உயரத்தில் தூக்கி நிறுத்தல் வேண்டும்.

🐐 தண்ணீர் தொட்டியினை சிமெண்ட் அல்லது எஃகு இரும்பினால் ஆன வாளியில் செய்து சுவற்றிலிருந்து கொக்கி மூலம் தொங்க விட வேண்டும்.

🐐 தீவனத் தொட்டி எளிதில் தூக்கிச் செல்லக்கூடியதாக அமைத்தல் சிறப்பு. ஒரு கொட்டகையில் வைக்கப்படும் தீவனத் தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டிகள் அங்குள்ள ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாறுபடும்.

இனப்பெருக்க மேலாண்மை.

🐐 ஆடுகள் வளர்ப்பு முறை இலாபகரமாக இருக்க ஆடுகள் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈன்ற வேண்டும். வேகமாக வளரும் தன்மை மற்றும் அதிக எடை கொண்ட ஆடுகளை இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்.

🐐 பெட்டை ஆடுகளை 1 வருட வயதில் இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும். குட்டி போட்ட 3 மாதத்திற்கு பிறகு இனச்சேர்க்கை செய்யவேண்டும். அப்போது தான் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈனும்.

🐐 சினை பருவ காலம் 18-21 நாட்கள் இடைவெளியில் வரும். அது 24-72 மணி காலம் நீடிக்கும். சினை பருவ காலத்தில் பெட்டை ஆடுகள் ஓங்கி கத்தும். மேலும் வாலை ஆட்டி கொண்டிருக்கும். இனப்பெருக்க உறுப்புகள் சிறிது வீங்கியும் சிவந்தும் காணப்படும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவம் ஒழுகுவதால் வாலை சுற்றி ஈரமாகவும், அழுக்காகவும் காணப்படும். சில ஆடுகள் தீனி எடுக்காமலும் சிறுநீர் அடிக்கடி கழித்துக் கொண்டும் இருக்கும். சில சமயங்களில் மற்ற ஆடுகள் மீது ஏறும் அல்லது ஏற அனுமதிக்கும். இவை சினை பருவ அறிகுறியாகும். அறிகுறிகள் தென்பட்ட 12-18 மணி நேரத்தில் கிடாவுடன் சேர்க்கவேண்டும்.

🐐 சில ஆடுகளில் சினைபருவ காலம் 2-3 நாட்கள் இருக்கும். எனவே அவற்றை இரண்டாவது தடவையாக 1 நாள் கழித்து மீண்டும் கிடாவுடன் சேர்க்கவேண்டும். கிடாவுடன் சேர்க்கும் நாட்களை தேதி வாரியாக குறித்துக் கொள்ள வேண்டும்.

🐐 ஆடுகளின் சினை பருவ காலம் 145-150 நாட்கள் ஆகும்.

சுகாதார மேலாண்மை

பராமரிப்பு .

🐐 குட்டிகள் பிறந்து 20 நாட்கள் வரை தாயுடனே இருக்க விட வேண்டும். அதற்கு மேல் குட்டிகளைத் தனியாகப் பிரித்து தீவனங்களைச் சாப்பிடப் பழக்க வேண்டும். பால் குடிக்கும் நேரத்திற்கு மட்டும் தாயுடன் சேர்க்க வேண்டும். மூன்று மாத வயது வந்தவுடன் பெட்டைகளையும், கிடாக்களையும் தனித்தனியாகப் பிரித்து வளர்க்க வேண்டும். அதேபோல வயது வாரியாகவும், இளம் சினையாடுகள், முற்றிய சினையாடுகள், குட்டி ஈன்ற ஆடுகள் எனவும் தனித்தனியாகப் பிரித்து வைக்க வேண்டும்.

புதிய ஆடுகள் கவனம்.

🐐 புதிதாக வாங்கி வரும் ஆடுகளை, ஏற்கெனவே பண்ணையில் இருக்கும் ஆடுகளோடு சேர்த்து அடைக்கக்கூடாது. அவற்றுக்கு ஏதேனும் நோய் இருந்தால் பண்ணையில் உள்ள ஆடுகளுக்கும் தொற்ற வாய்ப்புண்டு. புது ஆடுகளை நன்றாகக் குளிப்பாட்டி, பருத்தித் துணியால் மூக்குகளை சுத்தப்படுத்த வேண்டும். தேவையான தடுப்பூசி, மருந்துகளைக் கொடுத்து ஒரு வாரம் வரை தனிக் கொட்டகையில் வைத்திருக்க வேண்டும். பிறகு தான் பண்ணை ஆடுகளுடன் விட வேண்டும்.

கொட்டகை சுத்தம் அவசியம்.

🐐 கொட்டகை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். கால்நடைத்துறை மூலம் வழங்கப்படும் தாது உப்புக் கட்டிகளை கொட்டகையில் தொங்கவிட வேண்டும். தேவைப்படும் ஆடுகள் இதை எடுத்துக்கொள்ளும். கோடைக் காலத்தில் ஒரு ஆட்டுக்கு சராசரியாக 5 லிட்டர் தண்ணீரும், குளிர்காலத்தில் அரை லிட்டர் தண்ணீரும் தேவை. பசுந்தீவனங்களை தரையில் போடாமல், கட்டித் தொங்க விட்டால் வீணாகாது. மக்காச்சோளம், கம்பு, கோதுமை கலந்த அடர்தீவனத்தையும் தண்ணீரில் பிசைந்து, தினமும் கொடுக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்.

🐐 குடற் புழு நீக்கம்

🐐 தடுப்பூசிகள்

குடற் புழு நீக்கம்

🐐 ஒல்லியான மற்றும் பொலிவற்ற தோற்ற கொண்ட ஆடுகளில் குடற் புழு தாக்கம் இருக்கும். எனவே அந்த ஆடுகளை இனபெருக்கத்திற்கு முன் குடற் புழு நீக்கம் செய்யவேண்டும்.

🐐 சினை ஆடுகளை முதல் 2 மாத சினையில் குடற்புழு நீக்கம் செய்தால் கரு சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே சினை ஆடுகளை குட்டி போடுவதற்கு 2-3 வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

🐐 குட்டிகள் பிறந்த 30 நாட்களிலும் பிறகு 60 நாட்களிலும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

தடுப்பூசிகள்.

🐐 துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டி போடுவதற்கு 4-6 வாரத்திற்கு முன்னும், இனப்பெருக்கத்திற்கு 4-6 வாரத்திற்கு முன்னும் போடவேண்டும்.

🐐 துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டிகளுக்கு பிறந்த 8 வது வாரமும், பிறகு 12 வது வாரமும் போடவேண்டும்.

🐐 கிடாக்களுக்கு வருடம் ஒரு முறை துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை போடவேண்டும்.

விற்பனை.

🐐 இப்படி மூன்று மாதங்கள் வரை வளர்த்து, எடை வந்த பிறகு விற்பனை செய்யலாம். குட்டிகள் அதிக கொழுப்புடன் இருக்க கூடாது. இதனால் விலை குறைய வாய்ப்பு உள்ளது. நன்கு வளர்ந்த இளம்பருவ குட்டிகளை விற்பனை செய்ய வேண்டும். வியாபாரிகள் நேரடியாகவே வந்து வாங்கி கொள்வதால் இதன் விற்பனையில் பிரச்சனை எதுவும் இல்லை.

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் அனைவரும் விவசாயத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!