Wednesday, August 7, 2019

சீதளா ஸப்தமி.



எப்போதுமே தேவர்களுக்கு அசுரர்கள் தொல்லை கொடுத்து கொண்டு இருப்பார்கள்.அசுர குரு சுக்கிராசாரியாரின் உதவியுடன் அசுரர்கள் தேவர்கள் மீது ஆபிசார ப்ரயோகம் செய்தனர்.

இதனால் தேவர்கள் உடலில் வைசூரி போட்டியது. தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன் தலையிலிருந்த சந்திரனிடமிருந்தும், கங்கை யிடமிருந்தும் ஒரு பேரொலி ஏற்பட்டது. இந்த பேரொலியே சீதலா தேவி என் அழைக்கபடுகிறாள். சிராவண மாத சுக்ல பக்ஷ ஸப்தமி அன்று இது நிகழ்ந்தது.

ஆதலால் சீதலா தேவியை பூஜை செய்து தயிர் சாதம், வெள்ளறிக்காய் மாம்பழம் நிவேதனம் செய்து அதை தானம் செய்து விட வேண்டும்.

ஒரு இலையில் தயிர் சாதம், ஒரு மாம்பழம், ஒரு வெள்ளரிக்காய் வைத்து நிவேய்த்யம் செய்து மம புத்ர பெளத்ராதி அபிவ்ருத்தி த்வாரா ஸபரிவார சீதளாதேவி ப்ரீத்யர்த்தம்

சிராவண சுக்ல ஸப்தமிபுண்ய காலே இதம் ஆம்ர பலம், கர்கடீ பல ஸஹித தத்யோதனம் சீதலா தேவி ப்ரீத்யர்த்தம் தானம் அஹம் கரிஷ்யே என்று சொல்லி தெய்வ ஸன்னிதியில் வைத்து விட்டு ஏழைகளுக்கு தானம் செய்துவிட வேண்டும்.



உடலில் ஏற்படும் கட்டிகள், அம்மை, வைசூரி, முதலான பிணிகள் , நீண்ட நாட்களாக இருக்கும் வியாதிகள் நீங்கும். குடும்பத்திலும் இம்மாதிரி வியாதிகள் ஏற்படாது எங்கிறது கந்த புராணம்.