Saturday, August 3, 2019

சனியின் தாக்கத்தை நிவர்த்தி செய்ய



* சனிக்கிழமை தோறும் காலை குளித்து சுத்தமான ஆடை உடுத்திக் கொள்ளவும். எள்ளுசாதம், எள்கலந்த பலகாரம், பட்சணங்கள், கசப்பு பதார்த்தகங்கள் படைத்து பழம், தேங்காய் வெற்றிலைப் பாக்கு வைக்கவும். சனிக்கிழமை தோறும் விரதம் இருக்கவும்.
எள்ளை ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிது போட்டு கட்டி, திரி போல் திரித்து விளக்கில் போட்டு எள்ளு எண்ணை விட்டு தீபம் ஏற்றவும். பூஜை முடிந்ததும், எள்ளு சாதம் சிறிது எடுத்து ஓர் இலையில் வைத்து காக்கைக்கு சாப்பிட வைக்கவும்.

* முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்) யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும். இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர். இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம்.
இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம். இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து சாந்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.

* சனிக்கு பிடித்தமான எள், கருப்பு நீள கலர் துணியால் எட்டு பொட்டலம் தயார் செய்து தலையனை அடியில் வைத்துக் கொண்டு நாள்தோறும் உறங்கி வரவும். ஒவ்வொரு சனிக்கிழமையன்று ஒரு எள் பொட்டலம், அகல், நல்லெண்ணை மூன்றையும் குறிப்பிட்ட ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று அகல் விளக்கை நன்றாக எரியும் நிலையில் ஏற்றி எட்டுமுறை வலம் வரவேண்டும்.

* உடல் ஊனமுற்றவர்களுக்கு அல்லது அதை சார்ந்த பள்ளிகளுக்கு உதவி செய்தல்.

* அருகில் உள்ள சிவ ஆலயங்களில் சிவ வழிபாடு செய்தல்.

* சங்கடஹர சதுர்த்தி அன்று மோதகம் வைத்து அருகம்புல் சாற்றி வழிபடுதல்.

* ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மலை சாற்றி வழிபடுதல்.

* இந்த காலத்தில் பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு வழங்கலாம். ஏழைகளுக்கு கறுப்பு ஆடை தானம் வழங்கலாம். இந்த தானம் அவரவர் ஜென்ம வாரமாகவோ அல்லது ஜென்ம நட்சத்திரமாகவோ இருப்பது மிகவும் சிறப்பு ஆகும்.

* உடலில் பலகீனம், நோய் போன்றவை பீடித்து நீங்காமலிருப்பின் தவறாது பிரதோஷ விரதமிருத்தல் சிறப்பு. அதிலும் சனிப்பிரதோஷ விரதம் இருப்பது மிக மிக சிறப்பு.

* வீட்டிலும் தினசரி சமைத்த உணவை உண்ணுவதற்கு முன்பு காக்கைக்கு வைத்து அது உண்ட பின்பு உண்பது நலம்.

* ஒரு தேங்காயை பசுவாக ஆவாகனித்து ஆத்ம சுத்தியுடன் ஏழைகளுக்கு தானமாக வழங்கினால் போதும். வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் நவக்கிரஹ ஹோமம், சுதர்ஸன ஹோமம் போன்றவற்றை நடத்தினால் நல்லது.

* வன்னி மரத்தடி விநாயகருக்கு - பச்சரிசி அல்லது பச்சரிசி மாவு , கல்கண்டு போன்றவற்றை , அங்கு சுற்றி திரியும் எறும்புகளுக்காக உணவிடுங்கள். அற்புதமான ஒரு பரிகாரம் இது.

* அநாதை பிணங்களை, வசதி இல்லாதவர்களின் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இது சனி பகவானுக்கு மிகப் பெரிய பரிகாரம் ஆகும்..

* கால் நடக்கமுடியாத ஏழைகளுக்கு அவர்கள் நடக்க உதவும் வகையில் பொருள் உதவி செய்யலாம்... இது அவருக்கே நேரடியாக செய்யும் உதவியாக கருதப் படுகிறது.