Monday, August 19, 2019

கண் திருஷ்டியை போக்குவது எப்படி?


கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பது அர்த்தம் அதாவது ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுகிறது எனவும் சொல்லலாம்.

சக மனிதர்களை விட நாம் மேன்மை பெறும் நேரம்(புது வீடு கட்டுதல்,புது கார் வாங்குதால் அல்லது ஏதோ ஒன்று)மற்றவர்களின் இயலாமையால் நம் மீது விழும் பொறாமை கலந்த பார்வையே கண் திருஷ்டி அல்ல்து கண்ணேறுதல் ஆகும்.

பரிகாரம் என்பது நம் மீது விழும் ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும்.

வீட்டுக்கு உள்ள திருஷ்டி போக.,
---------------------------------------------------------
*வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைக்கலாம். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை செய்வது நல்லதாகும்.

*தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம்.

*ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும்.

நமக்கும்,வாகனங்களுக்கும்..,
----------------------------------------------------
*திருஷ்டிக்கழிப்பவர் கல் உப்பைக் கையில் வைத்தபடி மூன்று முறை அப்பிரதக்ஷிணமாய் சுற்றி பின் புதரில் போடலாம். ஒருவரும் இதற்குக் கிடைக்கவில்லை என்றால், நமக்கு நாமே செய்துக்கொள்ளலாம்.

*எலும்மிச்சம் பழத்தை வெட்டி, நடுவில் குங்குமம் தடவி இரண்டு கைகளிலும் வைத்துக்கொண்டு நமக்கோ அல்லது புது வாகனத்தின் வலது பக்கமாக மூன்றுதரம் சுழட்டி பின் இடதுப்பக்கமாக மூன்றுதடவை சுழட்டி அந்த எலுமிச்சைப் பழங்களை ஒருவர் காலிலும் படாதபடி எதாவது புதர்ப்பக்கம் வீசிப்போடலாம்.

*உயர்ந்த கட்டடங்களைக் கட்டும்போதும் புது வாகனம் வாங்கினாலும் கண் திருஷ்டி யந்திரம் வைப்பது இன்றியமையாததாகும்.