Tuesday, August 13, 2019

#நாம்_இறந்த_பின்_நம்_உடலில்_ஏற்படும் #மாற்றங்கள்_பற்றி_தெரியுமா❓❗



#மூளை

நீங்கள் இறந்த மறுநொடியே உங்கள் மூளை திடீரென விரிந்து இயக்கம் முடிவுறும்.

#உடல்_வெப்பம்

உங்கள் உடலில் வெட்பநிலை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1.6 ஃபாரன்ஹீட் அளவு குறைய ஆரம்பிக்கும்.
இதனால், இறந்தவர்களின் உடல் மெல்ல, மெல்ல குளிர்ந்த நிலைக்கு செல்கிறது.

#உடல்_செல்கள்

ஆக்ஸிஜன் சப்ளை இல்லாததால் மெல்ல, மெல்ல உங்கள் உடல் செல்கள் இறக்க ஆரம்பிக்கும். பிறகு உடைய ஆரம்பித்து, வெளியேற ஆரம்பிக்கும், இதனால் தான் உடல் அழுக ஆரம்பிக்கிறது

#கழிவு

சில சமயங்களில் தசை இலகுவாக ஆகும் தருணத்தில், இறந்தவரின் உடலில் இருந்து மலம் அல்லது சிறுநீரும் வெளியேறும்.

#தோல்

தோல் மெல்ல, மெல்ல ஈரத்தன்மை இழந்து, சுருங்க ஆரம்பிக்கும். இதனால், இறந்தவர்களின் கூந்தலும், நகமும் வளர்வது போன்ற தோற்றமளிக்கும்.

#பழுப்பு_நிறம்

புவி ஈர்ப்பு, இறந்தவர்களின் இரத்தத்தை கீழ் நோக்கி இழுக்கும். இதனால் சருமத்தின் மேற்புறம் பழுப்பு நிறமாக மாற ஆரம்பிக்கும்..

#துர்நாற்றம்

உடல் அழுகும் போது ப்யுட்ரெஸைனை, காலரா நுண்ணுயிர் நச்சு இரசாயனங்கள் வெளியேறும். இதன் காரணத்தால் தான் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

#புழுக்கள்

புழுக்கள், வண்டுகள் இறந்தவரின் உடலை உண்ண ஆரம்பிக்கும். புழுக்கள் இறந்தவரின் 60% உடலை ஒரே வாரத்தில் செரித்துவிடும்.

#ஊதா_கருப்பு

மெல், மெல்ல இறந்தவரின் உடல் ஊதா மற்றும் கருப்பு நிறமாக மாறும். இதற்கு காரணம், பாக்டீரியாக்கள் தொடர்ந்து இறந்தவரின் உடலை செரிப்பது தான்.
முடி ஓரிரு வாரத்தில் இறந்தவரின் உடலில் இருந்து முடிகள் மொத்தமும் உதிர்ந்துவிடும்.

#மாதத்தில்_உண்டாகும்_மாற்றங்கள்!

நான்கு மாதங்களில் இறந்தவரின் உடலில் இருக்கும் மொத்த தசை மற்றும் சருமம் அழுகி, வெறும் எலும்புக்கூடு மட்டும் தான் மிஞ்சும்.

#சிந்திக்க_சில_வரிகள்....

இப்படி அழிந்து அழுகி போகிற... உடலை வைத்து கொண்டுதான்...

நாம் போடும்..ஆட்டம் என்ன!
பாட்டம் என்ன..

திமிர் ,ஆனவம் என்ன!

வெட்டு குத்து அடிதடி சண்டை சச்சரவுகள் பகைமை வெறுப்பு அனைத்தும்
நாம்...
வாழுகின்ற வாழ்க்கை……

* சற்றே சிந்தித்து பார்த்து கொள்வோம்...

இறக்கும் முன்...தவறானவைகளை
இருக்கும் போதே சரி செய்து ..
கொள்ளுவோமே!!!