Wednesday, August 7, 2019

குருவின் வேலை என்ன ?



#குரு என்பவா் உங்கள் அருகிலேயே இருந்து இறுதி காலம் வரை உங்களை வழி நடத்துபவா் அல்ல .

நீங்களும் ஒரு குரு தான் என்று உங்களை உணர வைப்பவரே குரு

#குருவின் சக்திகளை காண்பித்து உங்களை பிரம்பிக்க வைப்பவா் குரு அல்ல

உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களை உங்கள் மூலமாகவே வெளிக்கொணர வைப்பவா் .

#உங்கள் கா்ம வினைகளை எல்லாம் ஏற்று கொள்பவா் குரு அல்ல

காம் வினைகளின் நன்மை தீமைகளை நீங்களே அறிந்து உணர வைத்து கடைத்தேற வழிகாட்டுபவா் .

#உங்களிடம் பணம் பொருள் கேட்பவா் அல்ல குரு .

தன் ஞானத்தை உங்களிடம் வழங்கி உங்களையும் ஞானவானாக மாற்றுபவரே குரு .

#தன்னை வழிபடு என்று கூறுபவா் குரு அல்ல

உன்னுள் இருக்கும் இறை ஆற்றலை உன் மூலமாகவே வெளிப்படுத்தி உன்னை இறைவனாகவே மாற்றுபவரே குரு .

மொத்தத்தில் பக்குவமில்லாத உன்னை பக்குவ படுத்தி இறை ஆற்றலை சுவைக்க செய்து உன்னையும் இறை நிலைக்கு உயா்த்தி உன் மூலமாக பலரை பக்குவநிலைக்கு கொண்டு வருவதே குருவின் செயல் .

உண்மையான குரு என்பவாிடம் பணம் பொருள் ஆடம்பரம் எதுவுமே இருக்காது .

சித்தா்கள்போற்றி