Saturday, July 13, 2019

பதம் தரும் சுபிட்சம் "" அத்தியாயம் -- 7 (10 / 19 ) ""கொங்கணவர் சித்தர் ""

""

இவருக்கு கொடும் சித்தர் என்றும் பெயர் உண்டு.

உதாரணமாக கொடிய பாஷாண வகை மருந்துகளை தயாரித்து அதை தானே சோதித்து பார்ப்பார்.

மிகக் கடுமையான கலைகளையும் விடா முயற்சியாக பயின்று வெற்றி காண்பவர்.

குருவருளே பெரிதென போற்றுபவர். இவரை பய பக்தியுடன் வணங்கி வந்தால் ஆயுளில் தோன்றும் கண்ட நோய்கள் நீங்கவும், நஞ்சு வகைகளால் தோன்றக்கூடிய கொடிய உபாதைகள் நேராமலும் பாதுகாத்து அருளுபவர் .

நாம் இணைந்து இருக்கும் குழுக்களில் தலைமை தாங்கும் ஆற்றலும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.

இவரை ஆலயம் வந்து வணங்க- உகந்த நாள் "" திங்கட்கிழமை ""

""கொங்கணவர் சித்தர் போற்றிகள்""

***கொடிதான பாஷாண வகை மருந்துகளின் முதல்வரே கொங்கண சித்தரே போற்றி.

கடிதான ரசவாத வித்தைகளை எளிதாய் புரியும் கொங்கண சித்தரே போற்றி.

முடியாத வித்தை ஏதுமில்லை குருவருள் கூடின் என போதித்த கொங்கண சித்தரே போற்றி.

கொடிதான நச்சு ரோகம் அழிக்கும் செந்தூர பஸ்பம் கண்ட கொங்கண சித்தரே போற்றி **

கொங்கணவர் சித்தர் போற்றியின் பொருள் :-

மிகக் கடுமையான நஞ்சு முறிப்பு மருந்துகளை தயாரிப்பதில் வல்லவர்.

இரசவாதக் கலைகளில் சிறந்தவர். குருவை வணங்க எல்லா கலைகளும் வசப்படும் என உணர்த்தியவர்.

நச்சு வகை நோய்களை அழிக்கக்கூடிய பஸ்ப மருந்துகளை தயாரிக்கும் முறைகளை வகுத்தவர் என்பது இப்போற்றிகளின் பொருள்.

தொடர்ந்து 12 முதல் 18 வாரங்கள் ஆலயம் வந்து கொங்கணவரை வணங்க மேற் சொன்னவைகள் எளிதில் கைகூடும்.