Tuesday, July 16, 2019

ஜோதிடப்படி ஒருவருக்கு என்ன மாதிரியான தொழில் அமையும்?





கல்வியறிவு பெறுவது அறிவை வளர்ப்பதற்காக என்றாலும், இன்று கல்வி தொழிலுக்காகவே என்றாகிவிட்டது .இது ஓரளவு உண்மையும் கூடவே.

ஜோதிடம் கண்டுபிடிக்கப்பட்டபோது உயர்குடியில் பிறந்த அரசர், அரசருக்கு பணிபுரியும் ஆண்கள்,போர்வீரர், மந்திரிகள் போன்றோர் ,வியாபாரம் செய்பவர் கடின உழைப்பாளி என்று நான்கு வகையில் ஜோதிடத்தை பிடித்தனர் அதாவது அவர்களை அந்தணர் , சத்திரியர் ,வைசியர், சூத்திரர் என பிரித்தனர். இவர்களின் குணத்திற்கு ஏற்ப அவர்களின் தொழிலையும் பிரித்தனர்.

இன்றைய காலத்தில் அப்படி அவர்களை பிரிக்க முடியாது .இன்று பல தொழில்கள் வந்துவிட்டன.

வகுப்பில் படிக்கும் 30 மாணவர்களின் பெற்றோர்களும் தன் பிள்ளை கலெக்டர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டால் மாவட்டத்திற்கு ஒரு கலெக்டர் மட்டுமே இருக்க முடியும் .

கலெக்டருக்கு டீ கொண்டு வருவது முதல் கார் ஓட்டுவது என மற்ற வேலையை யார் செய்வது.

ரோடு ரோடாக சைக்கிளில் சுக்குக் காப்பி விற்பவருக்கும் ஜாதகம் உண்டு.

அவருடைய ஜாதகத்தை பார்த்து இவர் ரோடு ரோடாக சென்று சைக்கிளில் டீ விற்பார் என்று எந்த ஒரு மிகப்பெரிய ஜோதிடர் ஆனாலும் சொல்லவே முடியாது.

ஜாதக காரக,ஆதிபத்தியத்தை வைத்து ஓரளவு உடல் உழைப்பு தொழில் என மட்டுமே கூற முடியும்.

அதே நேரத்தில் அவர் உடல் உழைப்பினால் வருமானத்தை பெறுவாரா அல்லது ஏசி ரூமில் உட்கார்ந்து உடலில் வியர்வை வெளியேறாமல் சம்பாதிப்பாரா எனச் சொல்ல முடியும்.

அதிகாரம் செய்யும் பணியில் இருப்பாரா இல்லை அடிமைத் தொழிலில் சம்பாதிப்பாரா எனவும் சொல்ல முடியும்.

அதே நேரத்தில் அவருடைய தன ,லாப தொழில் ஸ்தானத்தைவைத்து அவருடைய வருமானத்தையும் ஒரளவு தீர்மானிக்க முடியும்.

ஜோதிடத்தின் கட்டமைப்பே இவற்றில் தான் அடங்கியுள்ளது.

1. பத்தாம் இடத்தில் சுபகிரகம் இருந்து மற்றொரு சுபகிரகம் நோக்கி வேறு பாவ சம்பந்தம் இல்லாமல் இருப்பவருக்கு உடல் உழைப்பு பெரிதாக இல்லாமல் இருக்கும் தொழில் அமையும்.

2.லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் அவை வலுப்பெறாமல், மற்றொரு சுபகிரக தொடர்பு இருந்தாலும் ஓரளவு சொகுசான வாழ்க்கை அமையும்.

3. லக்னத்திற்கு பத்தாம் வீட்டில் சனி போன்ற பாவ கிரகங்கள் ஆட்சி ,உச்சம் போன்ற நிலையை அடைந்து வலுப்பெற்று மற்றொரு பாவகிரக தொடர்பு ஏற்பட்டால் உடல் சார்ந்த உழைப்பை கொடுக்கும். சுப கிரக தொடர்பு இல்லை எனில் உடலால் உழைத்து பிழைக்கும் நிலையை கொடுக்கும்.

4.பத்தாம் வீட்டின் அதிபதி பாவ கிரகங்களுடன் இணைந்தாலும் இதே நிலை. சுப தொடர்பு நல்லது.

அந்தக் காலகட்டங்களில் நடக்கும் தசா, புத்தி கோச்சாரத்தை ஆராய்ந்து அவற்றின் பலன் நல்லதோ கெட்டதோ அமையும்.