Tuesday, July 16, 2019

பச்சை மிளகாய், வற்றல் போன்ற காரமான எதையும் கடித்து, தாங்கமுடியாத காரம் ஏற்பட்டால்,

பச்சை மிளகாய், வற்றல் போன்ற காரமான எதையும் கடித்து, தாங்கமுடியாத காரம் ஏற்பட்டால், பொதுவாக நாம் தண்ணீர் குடித்துத் தணிக்கப் பார்க்கிறோம். இது முற்றிலும் தவறான வழிகாட்டுதல்!

தண்ணீர், நாக்கின் மேற்பரப்பில் உள்ள உணவுப்பொருளை வாயிலிருந்து அகற்றுமே ஒழிய, நாக்கைத் தாக்கி எரித்துக்கொண்டிருக்கும் (மிளகாய் விதைகளிலிருந்து வெளிவந்த) கேப்சாய்ச்சின் (Capsaichin) மூலக்கூறுகளை எதுவும் செய்ய முடிவதில்லை. அதனால்தான், தண்ணீர் குடித்தபின்னும் நாம் எரிப்பை தொடர்ந்து உணர்ந்துகொண்டிருக்கிறோம்.

மாறாக, (இந்த மூலக்கூறுகளை) எதிர்கொண்ட அடுத்த நொடியே செயலிழக்கச் செய்யும் ஆற்றல் பாலிலுள்ள லாக்டிக் அமிலத்திற்கு இருப்பதால்... காரத்தைப் போக்க பாலை வாயில் ஊற்றியதுமே, அடுத்த நொடி காரம் காணாமல் போகிறது.

பலர் இதை அறிந்தே இருக்கலாம்; அறியாத சிலருக்காக சொல்லியிருக்கிறேன். நன்றி!