Wednesday, July 31, 2019

நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம்

நீங்கள் ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள். ஆனால், ஏதோ தடங்கல், இடைஞ்சல் என்று தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய்விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள்.அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது நரசிம்ம ரூபம் குழந்தையை சீர்திருத்திட சீற்றம் கொள்ளும் தாய் ஒரே நொடியில், கோபம் தணிந்து, குழந்தையைக் கொஞ்சிப் பராமரிக்கிறாள். இது போலவே தான், இரண்யனைத் திருத்த, உக்ரவடிவமாக வந்த நரசிம்மரும் சீக்கிரமே யோகத்தில், அமைதியில் ஆழ்ந்து விடுகிறார்.விஷ்ணுவை போகமூர்த்தி என்றே பரவலாக கருதினாலும், அவர் தட்சணமூர்த்தி போல தன்னுள்ளேயே நிறைவு காணும் ஞானமூர்த்தியாக, தரிசிப்போர் ஞானநிலை அடைய உதாரணமாக இருப்பதே யோக நரசிம்ம ரூபம் ஆகும்.

.இன்று 31/7/2019 புதன்கிழமை ஆடி அமாவாசை அன்று நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம் பதிவு செய்துள்ளோம். ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாள் திருவடிகள் சரணம்

கீழே உள்ள சம்ஸ்க்ருத ஸ்லோகத்தைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லுங்கள். "பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே!

தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால்

தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே!

நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின்

துன்பத்தைப் போக்குபவனே!

லட்சுமி நரசிம்மனே!

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்

அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே

அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி

ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

இந்த ஸ்லோகத்தைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லுங்கள்.

"பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே!

தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால்

தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே!

நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின்

துன்பத்தைப் போக்குபவனே!

லட்சுமி நரசிம்மனே!

துன்பம் போக்கும் நரசிம்ம மஹா மந்திரம்

ஓம் உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்

ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்

ந்ருஷம்ஹம் பீஷணம் பத்ரம்

ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

- இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் துன்பம் நீக்கி வாழ்வில் மகிழ்ச்சி அடையலாம்.

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாள் திருவடிகள் சரணம்

துயரம் போக்கும் ஸ்ரீ நரசிம்ம பாடல்

எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்

ஏழ்படி கால் தொடங்கி,

வந்து வழிவழி ஆட் செய்கின்றோம்.

திருவோணத் திருவிழாவில்

அந்தியம் போதிலரியுரு வாகி

அரியை யழித்தவனை,

பந்தனை தீருப்பல் லாண்டு

பல்லாயிரத் தாண்டென்று பாடுதுமே

திருப்பல்லாண்டு 6.

பூதமைத் தொடு வேள் வியைந்து

புலன்களைந்து பொறிகளால்,

ஏதமொன்று மிலாத வண்மையி

னார்கள் வாழ் திருக் கோட்டியூர்,

நாதனை நரசிங்கனை நவின்

றேத்துவார் களுழக்கிய,

பாத தூளி படுதலாலிவ்

வுலகம் பாக்கியம் செய்ததே.

பெரியாழ்வார் திருமொழி 4.4.6.

பள்ளியி லோதி வந்த தன் சிறுவன்

வாயிலோ ராயிர நாமம்.

ஒள்ளிய வாகிப் போத வாங்கதனுக்

கொன்று மோர் பொறுப்பிலனாகி,

பிள்ளையாச் சீறி வெகுண்டு

தூண்புடைப்பப் பிளையெயிற் றனல்

விழிப் பேழ்வாய், தெள்ளிய

சிங்க மாகிய தேவைத்

திருவல்லிக் கேணிக் கண்டேனே.

பெரிய திருமொழி 2.3.8.

துயர வேளையில், ஆபத்துக் காலங்களில், சங்கடமான சந்தர்ப்பங்களில் உடனடியாக தாமதமின்றி நம்பெருமானின் சகாயத்தைப் பெற, ஸ்ரீ நரசிம்ம விசயமாக ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்யமான பாசுரங்களை, மேல் சொன்னவைகளை பலமுறை உள்ளமுருக வாய்விட்டுப் பாடினால் நிச்சயம் ஆபத்பாந்தவனான சர்வேச்வரன் பரிவு கொண்டு உடனடியாக, துரிதமாக நமக்கு அபயமளிப்பான் இது சத்தியம்!

துன்பம் போக்கும் நரசிம்ம மஹா மந்திரம்

ஓம் உக்ரவீரம் மஹா விஷ்ணும்

ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்

ந்ருஷம்ஹம் பீஷணம் பத்ரம்

ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

- இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் துன்பம் நீக்கி வாழ்வில் மகிழ்ச்சி அடையலாம்.

நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம்

அறியாமல் அல்லது செய்த பாவங்களால், கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். நரசிம்மரின் திருவடிகளில் சரணாகதி அடைவது, தண்டனையில் இருந்து விடுதலை தரும். தன்னை நம்பிச் சரணடைந்தவர் யாராக இருந்தாலும், அந்த விநாடியே ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் நரசிம்மர்.

அவரது படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வையுங்கள். தினமும் நீராடிய பின், "நரசிம்ம பிரபத்தி' ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள்.

இதே அந்த நரசிம்ம பிரபத்தி

நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை.

சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!

அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!

எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!

இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுலகத்திலும் நரசிம்மரே!

எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மரே!

நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை.

அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடை கிறேன்.

அஹோபில மடத்தின் 44வது பட்டமாக வீற்றிருந்த அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்ட மந்திரம் இது. இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும்.

இப்பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும். கைமேல் பலன் தரும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடி விடும். அதன் பிறகு நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும்.

கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம். பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார்.

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாள் திருவடிகள் சரணம்