Sunday, July 7, 2019

மனிதர்கள் சிறப்பாகவும், சுறுசுறுப்பாக செயலாற்ற அவர்கள் ரத்தத்தில் ...

மனிதர்கள் சிறப்பாகவும், சுறுசுறுப்பாக செயலாற்ற அவர்கள் ரத்தத்தில் வீரியத்தன்மை அதிகம் இருக்க வேண்டும் ஜோதிட சாஸ்திரப்படி நம் அனைவருக்கும் ரத்தத்தின் வீரிய சக்திக்கும், தைரியமான குணத்திற்கும் காரகத்துவம் வகிக்கும் கிரகமாக செவ்வாய் பகவான் குறிப்பிடப்படுகிறார். அந்த செவ்வாய் பகவானுக்குரிய ராசியாக விருச்சிகம் ராசி இருக்கிறது. விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் அதிக செல்வம், அதிர்ஷ்டங்களும் யோகங்களும் நிறைந்த வாழ்க்கையை பெறுவதற்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். 12 ராசிகளில் எட்டாவது ராசியாக வருவது விருச்சிகம் ராசியாகும். விருச்சிகம் என்றால் சம்ஸ்கிருத மொழியில் தேள் என்பதை குறிக்கும். நெருப்பு, போர் போன்றவற்றிற்கு காரகனாக இருக்கும் செவ்வாய் பகவான் இந்த விருச்சிக ராசியின் அதிபதியாக இருக்கிறார். விருச்சிக ராசியினர் தங்களின் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் பெற கீழ்கண்ட பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்து வருவது சிறப்பு. விருச்சிகராசிக்காரர்கள் வருடத்திற்கு ஒருமுறை நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு சென்று சிவபெருமான் மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அதோடு அங்கிருக்கும் செவ்வாய் பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். செவ்வாய்க் கிழமைகள் தோறும் வீட்டில் முருகன் படத்திற்கு செந்நிற மலர்களை சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி தீபமேற்றி வழிபட்டு வர வேண்டும் சிவப்பு நிற பவளம் ஒன்றை வெள்ளியில் பதித்து, மோதிரமாக வலதுகை மோதிர விரலில் ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று அணிந்து கொள்ள வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு ஆடைகளை அணிந்து கொள்வது உங்களுக்கு அதிர்ஷ்டங்களை அதிகம் ஏற்படுத்தும். உங்கள் வீட்டின் அருகாமையில் இருக்கும் கோயிலுக்கு சனிக்கிழமைகள் தோறும் எண்ணெய் தானம் செய்வது நல்லது. அம்மன் மற்றும் அய்யனார் போன்ற தெய்வங்கள் இருக்கும் கிராம கோவில்களில் சூலம், அரிவாள் போன்றவற்றை செய்து காணிக்கை செலுத்துவது சிறந்த பரிகாரமாகும். வசதி குறைந்த பெண்களின் திருமணத்திற்கு மாங்கல்ய தானம் செய்வதும் செவ்வாய் பகவானின் அருளை பெற்றுத்தரும் ஒரு மிகச் சிறந்த பரிகாரமாக இருக்கிறது!!!