Tuesday, July 16, 2019

நட்சத்திர பதிவு: அஸ்தம்:



அஸ்தம் புதனின் வீடான கன்னியில் முழுமையாக அமைய பெற்ற நட்சத்திரம். இதன் அதிபதி சந்திரன்.

அழகிய பெண்ணை குறிக்கும் கன்னியில் தாய்மையை குறிக்கும் சந்திரன் இருக்கும் போது அதன் தன்மையை புரிந்து கொள்ள முடியும்.
ஒரு பெண்ணிற்கு இருக்கும் பொறுமை, அன்பு போன்ற சாத்வீக பண்புகளோடு திகழ்வார்கள்.எல்லாரிடமும் அமைதியாகவும் பணிவாகவும் பேசி தங்கள் காரியங்களை சாதித்து கொள்வார்கள்.உணர்வுகளை புரிந்து நடந்து கொள்வார்கள்.

வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் மனதில் எப்பொழுதும் இருக்கும். இந்த ராசியின் குறியிடு கைகள் ஆகும்.கைகள் என்பது உழைப்பையும் செயல்பாட்டையும் குறிக்கும்.அது போல அஸ்தம் அன்பர்களின் வாழ்க்கையும் உழைப்பால் தான் முன்னேற முடியும் என்ற வகையில் இருக்கும்.

தொழில் பக்தி நிறைந்த இவர்கள் பிறருடைய வேலை என்று நினைக்காமல் அர்ப்பணிப்பு உணர்வோடு செய்வார்கள்.வாழ்வில் முன்னேற்றம் என்பது 32 வயதிற்கு மேல் தான் இருக்கும்.சந்திரன் நிலையற்றவர் என்பதால் வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் சீரான முறையில் இருந்தவாறு இருக்கும்..

அஸ்த நட்சத்திர அன்பர்களுக்கான கோவில் நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் உள்ள கோமல் என்னும் ஊரில் வீற்றிருக்கும் கிருபா கூபாரீஸ்வரர் ஆலயம் ஆகும்.சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் இறைவன்.ஜென்ம நட்சத்திர நாளில் வழிபாடு செய்வது நன்மை தரும்.