Tuesday, July 16, 2019

காமம் பற்றி ஜோதிடத்தில் அறியும் விதம்



உலகில் பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் 3 ஆம் இடம் 7ஆம் இடம் 12ஆம் இடம் ஆகிய மூன்று வீடுகளுமே ஒருவரின் காம இச்சையை வெளிப்படுத்தும் இடங்களாகும்

மூன்றாம் இடமே போக சக்தியைத் தூண்டக் கூடியதாகவும் வீரிய சக்தியை மூலகாரணமாக இருக்கக் கூடியதாகும் மூன்றாம் இடத்து அதிபதி ஆக விளங்கும் கிரகத்தின் நிலையைப் பொறுத்து அந்த ஜாதகரின் மர்ம உறுப்பின் தன்மை அளவு நிர்ணயிக்கப்படுகின்றது

மூன்றாம் அதிபதி கேந்திர திரிகோணங்களில் அமரும்போது ஜாதகருக்கு அதிக வீரிய சக்தியை மர்ம உறுப்பின் தன்மை இயல்பிலும் பெரிதாகவும் காணப்படும மாறாய் மூன்றாம் அதிபதி நீச்சம் பெற்றோ ராகு சனி உடன் சேர்ந்து காணப்பட்டாலோ அவரால் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட முடியாது

அடுத்து ஏழாம் வீட்டில் சனி செவ்வாய் ராகு கேது போன்ற கிரகங்கள் அமரும்போது காமத்தை அனுபவிக்கும் தன்மை குறைகிறது அதேபோல் உறவின் போது கடினத் தன்மை ஏற்படுகிறது மாறாய் ஏழாம் வீட்டை குரு சுக்கிரன் வளர்பிறை சந்திரன் தனித்த புதன் ஆகிய கிரகங்கள் பார்த்தால் அந்த ஜாதகருக்கு காமத்தின் ஈடுபடும் நேரம் போகத்தின் இன்பம் முழுமையாகவும் அதிகமாகவும் கிடைக்கும்

அடுத்து பன்னிரண்டாம் வீடு மிக முக்கியமாக அந்த இடத்தை பொறுத்து தான் ஒருவர் உடலுறவு கொள்ளும் இடத்தின் தன்மை நிர்ணயிக்கப்படுகிறது 12ம் வீட்டை சுபகிரகங்கள் செய்தால் அந்த ஜாதகர் மெத்தை மற்றும் பூக்கள் தூவிய உயர்ரக மெத்தையில் பெண்ணுடன் கூடுதலாக இந்த மாதிரி இருப்பார் ஆனால் பன்னிரண்டாம் வீட்டில் ராகு கூடியிருந்தால் அல்லது சனி செவ்வாய் இருவரும் பனிரெண்டாம் வீட்டைப் பார்த்தாலும் முதல் இரவில் அவர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடும்

அதேபோல் 12ம் வீட்டில் பாவ கிரகங்கள் இருந்தால் காமத்தில் ஆர்வம் குன்றும் 12 இல் ராகு செவ்வாய் சனி இருந்தால் குறுகிய இடத்தில் பயந்த சுபாவத்துடன் விருப்பமின்றியோ இருவரில் ஒருவரின் தூண்டுதலின் பேரில் மட்டுமே காமத்தில் ஈடுபடவேண்டி இருக்கும்