

தேவர்களின் குரு பிரகஸ்பதி குரு பகவான். அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார். மனித வாழ்வில் கிடைக்க வேண்டிய அத்துணை மகிழ்ச்சிக்குமான திறவுகோல் இந்த இரண்டு கிரகங்களிடம் தான் உள்ளன.
குரு மாபெரும் சுபர்.சுக்கிரன் மற்றொரு மிகப்பெரும் சுபர்.இருவரும் சேர்ந்து ஒரு பாவத்தில் நின்றால் கிடைக்கும் பலன்கள் எப்படி இருக்கும்??
குருவிற்கான காரகங்களான தனம்,குடும்பம்,கலை, பழங்கால நடனம் சுக்கிரனுக்கான காரகங்களான காதல்,இன்பம்,இசை,கலை நயம்,ஆடம்பரம், சொகுசு என இரண்டும் ஒன்றோடு ஒன்று சேரும் போது புதுமைகள் பிறக்கும்.புதிய கலைகள் பிறக்கும்.
இந்த சேர்க்கை உள்ளவர்கள் இயற்கையிலே கலைத்திறன் மிக்கவர்களாகவும் அதீத அன்பை தருபவர்களாகவும் காதல் உணர்வு மிக்கவர்களாகவும் திகழ்வார்கள்.
சரஸ்வதி யோகம் என்பது ஜோதிடத்தில் மிக உன்னதமான யோகமாகும்.குரு சுக்கிரனின் இணைவு சரஸ்வதி யோகத்தை தரும் வல்லமை கொண்டது. பணத்திற்கும் தங்கத்திற்கும் காரகர் குரு.ஆடம்பரத்திற்கு சுக்கிரன் காரகர்.இந்த சேர்க்கை உள்ளவர்கள் எப்பொழுதும் சிறந்த பொருட்களையே அதுவும் மிக விலை உயர்ந்த பொருட்களையே வாங்கி அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
காதல் என்று எடுத்து கொண்டோம் என்றால் எதிர்பாலினத்தவருக்கு திகட்ட திகட்ட அன்பை பொழிவார்கள். அது அவர்களை ஒட்டுமொத்தமாக கட்டி போட்டுவிடும் அளவுக்கு இருக்கும்.
கலைகள் என்று எடுத்து கொண்டால் பழமையையும் புதுமையையும் இணைத்து கலைத்திறனை வெளிப்படுத்தி வியப்பில் ஆழ்த்தும் படி செய்வார்கள்.
இரண்டு கிரகங்களும் பணம் பொருள் ஆகிவற்றிற்கு காரகர்கள் என்பதால் மிக சிறந்த முறையில் பணம் வரவு இருக்கும்.அது 1,2,3,5,10,11,12 ம் பாவகமாக இருந்தால்.காற்று ராசி என்றால் இன்னும் அதிகரிக்கும்.
இந்த சேர்க்கையில் எந்த கிரகத்திற்கு குறைந்த பாகைகள் உள்ளது அந்த கிரகம் அடுத்த கிரகத்தை வழிநடத்தும்..குருவிற்கு குறைந்த பாகைகள் என்றால் சுக்கிரனை கலைநயத்தோடு செயல்பட வைத்து சாதனைகள் செய்ய வைத்து அழகு பார்ப்பார்.
சுக்கிரனுக்கு குறைந்த பாகைகள் என்றால் காதலில் சிறந்த விஷயங்களை கொடுத்து சிற்றின்பங்களை அனுபவிக்க வைத்து மகிழ்ச்சியுற செய்வார்.
இந்த சேர்க்கை எந்த ராசி என்பதை பொறுத்தும் இவர்கள் மீது எவர் பார்வை விழுகிறது என்பதை பொறுத்தும் மாற்றங்கள் இருக்கும்.
அதே போல் சில ராசிகளில் இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் நீசம் என இருக்கும் போது இடத்திற்கு தகுந்தாற் போல் பலன்கள் உண்டாகும்.
குறை என்று சொல்ல வேண்டும் என்றால் ஆடம்பரம் மீதான பற்று பற்றி சொல்லலாம்.ஆனாலும் இந்த சேர்க்கையில் உள்ள எல்லாரும் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சுப சேர்க்கை என்பதால் பரிகாரம் தேவை இல்லை..
நன்றி...