Wednesday, July 31, 2019

மாங்கல்ய_பலன்_தரும் #ஆடி_அமாவாசை #விரதம்.!!

#
#அமாவாசையன்று #பித்ருக்கள்_வழிபாடு #செய்பவர்கள்_மட்டுமே, #விரதம்_இருக்கவேண்டும் #என்று_சொல்வார்கள். #ஆனால்_சுமங்கலிப் #பெண்கள்_அமாவாசை #முன்தினம்_இன்று) #இந்தக்_கதையைப் #படித்து_மறுநாள் #அமாவாசையன்று #விரதமிருந்து_தேவியை #வழிபட்டால்_மாங்கல்ய #பலன்_கூடுமாம். #அது #என்ன_கதை?
#படிக்கலாம்_வாருங்கள்..

அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்கு எல்லா செல்வமும் வளமும் நிறைந்தும், குழந்தைப்பேறு மட்டும் கிட்டாமல் இருந்தது. குழந்தைப்பேறு வேண்டி, தீர்த்தயாத்திரைகளும், ஆலய வழிபாடுகளும் மேற்கொண்டான். இறைவனது அருளால் அவனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இறைவனது அருள்பார்வை தம் மீது பட்டதை உணர்ந்து, இறைவனுக்கு நன்றியுரைத்தார்கள் அரசனும், அரசியும். அப்போது அசரீரி ஒன்று கேட்டது.
உன்னுடய மகன் எல்லா கலைகளையும் கற்று சிறப்பாக வளர்வான். ஆனால், இளம்பருவம் வந்ததும் அவன் மரணமடைந்துவிடுவான் என்றது. அசரீரியின் குரலால் வருத்தமடைந்த அரசன், மீண்டும் புனிதயாத்திரைகள் சென்றான். வழிநெடுகிலும் இருக்கும் ஆலயங்களைத் தரிசித்து தனது மனக்குறையைப் போக்க வழிபட்டான்.
ஒருமுறை காளி கோயிலில் மனம் உடைந்து அவன் வழிபட்டபோது அவன் மீது மனமிறங்கிய காளி தேவி, அவன் முன் தோன்றினாள். கவலைப்படாதே அவ்வாறு உன் மகன் இறந்துவிட்டால், அவனுக்கு திருமணம் செய்துவை. அவனுடைய மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர்த்தெழுவான் என்றாள்.
அரசனும் காளியின் அருளால் மகிழ்ந்து நாடு திரும்பினான். இளவரசன் வளர்ந்து இளமைப்பருவம் வந்த போது, பெற்றோரை இழந்து உறவினர்களால் துன்புறுத்தப்படும் பெண் ஒருத்தி, மாங்கல்ய பலம் கொண்டவள் என்பதை அறிந்து, அவளை இளவரசனுக்கு மணமுடித்து வைத்தார்கள்.
அன்று இரவு இருவரையும் காட்டுக்குள் விட்டு விட்டு எல்லோரும் நாடு திரும்பினார்கள். மறுநாள் அவன் இறந்துபோன உண்மை தெரிந்ததும் அழுதாள். அனைத்து தெய்வங்களின் பெயர்களையும் சொல்லி கதறினாள். அவளது கதறலில் மனமிறங்கிய பார்வதி தேவி, ஈஸ்வரனின் அனுமதியோடு அவனை உயிர்த்தெழ செய்தாள். இளவரசனும் அவன் மனைவியும் மகிழ்ந்தார்கள். இந்த சம்பவம் நடந்தது ஆடி மாத அமாவாசை தினத்தில்.
இருண்டு போன தன் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றியது போல் இந்நாளில் விரதமிருந்து வழிபடும் பெண்கள், சுமங்கலியாக நீண்ட நாள் வாழ அருள் புரியவேண்டும் என்று அம்பாளிடம் வேண்டினாள். அதை ஏற்றுகொண்ட அம்பிகை, அமாவாசை முதல் நாள் சுமங்கலிப் பெண்கள் என்னை நினைத்து விரதம் மேற்கொண்டு, அமாவாசை அன்று வழிபட வேண்டும்.
வீட்டில் சுமங்கலிகளை அழைத்து குங்குமம், மஞ்சள் என மங்கலப் பொருள்களை தாம்புலம் தந்து உபசரிக்க வேண்டும்.இயலாதவருக்கும்,முதியோர்களுக்கும் அன்னதானம் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் வீட்டில் மகாலக்ஷ்மி கடாட்சம் நீடிக்கும். மாங்கல்ய பலன் அதிகரிக்கும் என்று அருள்புரிந்தாள் பார்வதி தேவி.
ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு விரதம் இருந்து வழிபடுவது போலவே பெண்களும் தங்கள் மாங்கல்ய பலனுக்காக அம்பிகையை வழி பட்டு விரதம் இருக்க வேண்டும். மாங்கல்ய பலமும் மன அமைதியும் செளபாக்கிய வாழ்வும் கிட்டும்...